அன்பானவள்! தைரியமானவள்! அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.. மகள் மீரா தற்கொலையால் விஜய் ஆண்டனி உருக்கம்
சென்னை: மகள் மீரா தற்கொலை செய்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் என் மகள் ஜாதி, மதம், பணம், வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு தான் சென்று இருக்கிறாள் என் மகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தனது குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் பெயர் மீரா. இளைய மகள் பெயர் லாரா.

இதில் மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த வீட்டில் யாரும் இல்லாதபோது கடந்த 19ம் தேதி அதிகாலையில் மீரா தனது வீட்டு அறையில் தூக்கிட்டு கொண்டார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மீராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மொத்த குடும்பமும் கதறி அழுதது. இதையடுத்து அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர்.
— vijayantony (@vijayantony) September 21, 2023
இதையடுத்து சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுபற்றி தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனஅழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அனைவரையும் மிஸ் செய்வதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது மகள் பற்றி உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள். தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications