Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஒரு தொகுதி போதும் என்றேன்.. 2 கொடுத்திருக்காங்க”.. எப்படி இருந்த டிடிவி தினகரன் இப்படி ஆகிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூட்டணியில் 1 தொகுதி தான் கேட்டோம், 2 சீட் கொடுத்துள்ளனர் எனக் கூறியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீட்டை அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட முடித்து விட்டன. தொகுதி பங்கீட்டை முடித்துள்ள திமுக வேட்பாளர் பட்டியலையும் இன்று அறிவித்துள்ளது.

I asked only one seat they gave 2 seats says AMMK chief TTV Dhinakaran

அதேபோல், அதிமுகவும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது அதிமுக.

பாஜக கூட்டணியில் சீட் பங்கீடு: பாஜக கூட்டணியில் ஏசி சண்முகம், ஓபிஎஸ், ஜான் பாண்டியன், ஐஜேகே, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடன் பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக - அமமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி, பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பாஜக கூட்டணியில் தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமமுக - 2 சீட்: பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இருவரும் இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அவை எந்த இரண்டு தொகுதிகள் என்பது பாஜக அறிவிக்கும். தஞ்சாவூர் நான் பிறந்த மண், அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளோம். அமமுக நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தான் விரும்புகிறார்கள்.

போதும் என்ற மனமே..: நாங்கள் தொகுதிகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தவில்லை. போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். அந்த வகையில் 9 தொகுதிகளில் எங்களுக்கு வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். 9 தொகுதிகளையும் கொடுத்தாலும் போட்டியிடுவோம், மற்ற கட்சிகள் கேட்டால் அதற்கு தகுந்தபடி முடிவு செய்வோம் என முதல் நாளிலேயே மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலையிடம் கூறினேன்.

1 தான் கேட்டேன்: முதலில் பாஜக எங்களுக்கு அதிக தொகுதிகளை கொடுக்க ஒப்புக் கொண்டிருந்தார்கள். கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்துள்ளதால், அவர்கள் என்னிடம் கேட்டதும் விட்டுக் கொடுத்தேன். தற்போது குறைத்து 2 தொகுதிகள் கொடுத்துள்ளார்கள். ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியது. அதன்படி தான் இன்று 2 தொகுதிகளை கொடுத்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் அமமுக வாக்கு வங்கி அதிகம் உள்ளது. எங்கள் கூட்டணிக்கு அது வெற்றிக்கான பலத்தை கொடுக்கும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரதமர் மோடி வெற்றி பெற அணில் போல் உதவும். திமுகவின் பொய் பிரச்சாரங்களை வீடு வீடாக சென்று முறியடிப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

எப்படி இருந்த அமமுக: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அமமுக. திமுக, அதிமுக கூட்டணிக்குப் பிறகு அமமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. 37 தொகுதிகளில் போட்டியிட்டு, மொத்தமாக 22 லட்சம் வாக்குகளைப் பெற்றது அமமுக. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 5.38%. நாம் தமிழர் கட்சி, அப்போது 4 சதவீத வாக்குகளைப் பெற்றது.

அமமுகவுக்கு 2 சீட்.. கையெழுத்தானது ஒப்பந்தம்.. கடைசியா டிடிவி தினகரன் சொன்னதை கேட்டீங்களா?


கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், அமமுக, குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்றது. 170 தொகுதிகளில் போட்டியிட்டு 2.36 சதவீத வாக்குகளைப் பெற்றது. அமமுக போட்டி காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரிய அடி விழுந்தது. பல தொகுதிகளில் அதிமுகவின் வெற்றிக்கு இடையூறாக அமமுக வாக்குகளைப் பிரித்தது. இதனால் அந்த இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 102 இடங்களில் வெற்றி பெற்றது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் மாநகராட்சியில் 3 இடங்களிலும், நகராட்சிகளில் 33 இடங்களிலும், பேரூராட்சிகளில் 66 இடங்களிலும் அமமுக வென்றது. டிடிவி தினகரன் பிரச்சாரத்திற்கே போகாத நிலையிலும் அமமுக அத்தனை இடங்களில் வென்றது.

அந்தளவுக்கு, அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் சக்தியாக இருந்த அமமுக, பாஜக கூட்டணியில் வெறும் 2 சீட்களைப் பெற்றுள்ளது கட்சியினரை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. அதிலும் 1 சீட் தான் கேட்டேன், 2 கொடுத்திருக்கிறார்கள் என டிடிவி தினகரன் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+