அமமுகவுக்கு 2 சீட்.. கையெழுத்தானது ஒப்பந்தம்.. கடைசியா டிடிவி தினகரன் சொன்னதை கேட்டீங்களா?
சென்னை: பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து, இன்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது.

அதேசமயம், அதிமுக, பாஜக கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. இன்று மாலை அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைய உள்ளது. இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது அதிமுக. பாஜகவும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இருவரும் இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஒரு தொகுதி போதும் என்று தான் கூறியதாகவும், பாஜக தான் 2 தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தி 2 சீட்களை அளித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
1 சீட் தான் கேட்டோம் - தினகரன்: மேலும், "பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 'அணில்' போல் செயல்படும். திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை வீடு வீடாக சென்று முறியடிப்போம். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு தரப்பட்டுள்ளது.
முதலில் பாஜக எங்களுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தார்கள். கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்துள்ளதால் தற்போது குறைத்து கொடுத்துள்ளார்கள். ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியது.
குக்கர் சின்னத்தில்: போதும் என்ற மனநிலை இருந்ததால் 2 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டோம். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும். அதன் பிறகு அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும்.
மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் கட்சியினரின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. டெல்டா தொகுதியில் போட்டியிடவே எனக்கு விருப்பம். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத் தான் எங்கள் கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
ஓபிஎஸ், தமாகா: ஏற்கனவே பாஜக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு 10 சீட்களை ஒதுக்கியுள்ளது பாஜக. மேலும் சிறிய கட்சிகளுக்கும் சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்று அமமுகவுக்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், தமாக மற்றும் ஓபிஎஸ் அணியினருடனும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை உறுதி செய்ய இருக்கிறது பாஜக. அதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும். அதன் பின்னர் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications