குடையோடு வெளியே போங்க.. வெயில் சுட்டெரிக்கப் போகுது.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளில் பொதுவாகவே வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 5 டிகிரி வரை வெயிலின் தாக்கல் அதிகரித்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள். இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வறண்ட வானிலையே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

Weather Rain Chennai Rain

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளில் பொதுவாகவே வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 20ஆம் தேதி நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையாக ஓரிடு இடங்களில் 2 - 4 டிகிரி செல்சியல் வரை உயரக்கூடும். அதேபோல் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 40டிகிரி செல்சியல் வரை இருக்கக்கூடும். மக்களுக்கு வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+