இந்தியாவுக்கு பெரிய ஆப்பு வைக்கும் டிரம்ப்? 500% வரி அபாயம்! ஈரான் நெருக்கடியில் இது வேறயா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதா சமீபத்தில் மறைந்த அமெரிக்க செனட் சபை உறுப்பினர் லின்சே கிரஹாம் முன்மொழிந்து இருந்த நிலையில் அந்த மசோதா மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. அது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், டிரம்பும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமறத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் 500 சதவீதம் வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கிடைக்கும். இதனால், இந்தியா, சீனா ஆகிய நாடுகளே அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Donald Trump Backs Russia Sanctions Bill That Could Hit India With 500 Tariffs

500 சதவீதம் வரி விதிக்கும்

அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டிரம்பின் வரி விதிப்பு திட்டங்கள் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வரும் நிலையில், அதற்கும் டிரம்ப் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களர் சிலர் எதிராக உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவை அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மறைந்த லிண்ட்சே கிரகாம் முன்மொழிந்து இருந்தார். இந்த மசோதாவுக்கு ஜனநாயாக கட்சியின் செனட் சபை உறுப்பினர் ரிச்சர்டு புளுமெந்தாலும் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, சீனாவுக்கு பாதிப்பு

முன்மொழியப்பட்டு இருக்கும் இந்த பொருளாதார தடை மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கும் அதிகாரத்தை டிரம்பிற்கு வழங்கும். இது இந்தியா, சீனா ஆகிய நாடுகளை கடுமையாக பாதிகும். இந்த மசோதாவை முதன்முதலில் முன்மொழிந்த கிரஹாம், "ரஷ்யாவுக்கு மட்டும் அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த மசோதா இருக்காது. ரஷ்யாவுக்கு எரிசக்தி வருவாயை கொடுக்கும் நாடுகளுக்கும் சேர்ந்து அழுத்தம் கொடுக்கும்" என்றார்.

இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து 70 சதவீதம் அளவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோலிய பொருட்களை வாங்குவதாக கிரஹாம் தொடர்ச்சியாக கூறி வந்தார். ரஷ்யாவுக்கு கிடைக்கும் வருவாயை நிறுத்தினால், அந்தநாட்டிற்கு பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும். இதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் உதவக்கூடும்.

இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்

அமெரிக்க கருவூலத்துறை அறிவித்த சலுகை கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதியே முடிந்தது. இந்த சலுகையின் கீழ் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்னெய் வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது என்ற நிலையும் இருந்தது. தற்போது இந்த சலுகை முடிந்த நிலையில், புதிய மசோதாவும் முன்மொழியப்பட்டு இருப்பது இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளுவதாக அமைந்துள்ளது.

500 சதவீத வரி விதிக்கும் மசோதா நிறைவேறி, இந்தியாவுக்கு அந்த அளவு வரி விதிக்கப்பட்டால், இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும். இந்தியாவின் ஜிடிபி 0.5 சதவீதம் வரை குறையக் கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா - ஈரான் போரால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு மேலும் நெருக்கடியை கொடுப்பதாக அமைந்துள்ளது. ஏற்றுமதியை சார்ந்து செயல்படும் துறைகளாக உள்ள பாராமெடிக்கல், ஜவுளித்துறை மற்றும் ஐடி சேவைகள் உடனடியாக தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+