ஈரான் அழியும்.! அதிபர் டிரம்ப் கொல்லப்பட்டால்.. அடுத்து என்ன நடக்கும்? அதிகாரம் யாரிடம் செல்லும்?
வாஷிங்டன்: தன்னை படுகொலை செய்ய ஈரான் முயன்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். தன்னை படுகொலை செய்ய ஈரான் முயன்றால்.. இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய தாக்குதலை நடத்த அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒருவேளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொல்லப்பட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
இதற்கிடையே ஈரான் மீது டிரம்ப் சில பகீர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதாவது கடந்த சில ஆண்டுகளாக ஈரான் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக டிரம்ப் கூறியுள்ளார். அவர் மேலும், "ஈரான் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறது. அப்படி ஏதாவது நடந்தால், ஈரான் மீது ஏவ 1,000 ஏவுகணைகள் தயார்நிலையில் உள்ளன. அத்தோடு நிற்காது மேலும் தாக்குதல் தொடரும்" என்றார்.

டிரம்ப்பிற்கு கொலை முயற்சி
மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி இறுதி அஞ்சலி நிகழ்வுகளின் போது, டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்ல வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. பழிக்குப் பழி வாங்கும் வகையில் டிரம்ப்பை கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். தற்போதைய ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும் தனது உரையில், "என் தந்தை மற்றும் இந்த இரு போர்களில் உயிர்நீத்த அனைவரது தியாகங்களுக்கும் பழிவாங்குவோம். நிச்சயம் பழிவாங்குவோம்" என்று பேசியிருந்தார்.
ஆனால், அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரை கொல்வது எல்லாம் அவ்வளவு லேசுப்பட்ட காரியம் இல்லை. ஏகப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் இருக்கும். அனைத்தையும் தாண்டி நெருங்குவது எல்லாம் முடியவே முடியாது. அப்படி அனைத்தையும் தாண்டி ஒருவேளை எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்.. அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
சட்டம் சொல்வது என்ன
முதலில் அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் கொல்லப்பட்டால் தானாகவே ராணுவம் தாக்குதலை நடத்த வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதிபர் மரணமடைந்தால் அடுத்து யாருக்கு அந்த பவர் போகும் என்பதை அமெரிக்க சட்டம் தெளிவாக சொல்கிறது. 1947ல் கொண்டு வரப்பட்ட Presidential Succession Act மற்றும் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 25வது திருத்தத்தின்படி அதிபர் உயிரிழந்தால் அவரது அதிகாரம் அனைத்தும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு போகும். அவர் அமெரிக்காவின் அதிபராக உடனடியாக அதிபராக பதவியேற்பார்.
அதிகாரம் யாருக்கு போகும்!
அதன் பிறகு, ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முழுமையாக அவரிடமே இருக்கும். டிரம்ப் முன்கூட்டியே கொடுத்த உத்தரவுகளை ஜே.டி. வான்ஸ் செயல்படுத்தலாம். அதேநேரம் அதை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று எந்தவொரு சட்டமும் இல்லை. அதிபர் என்ற முறையில் அவர் அமெரிக்காவுக்கு எது நல்லதோ அந்த முடிவை எடுக்க முழு சுதந்திரமும் அதிகாரமும் அவருக்கும் இருக்கும்!
பின்னணி
டிரம்பிற்கும் ஈரானுக்கும் உள்ள மோதல் இன்று நேற்று தொடங்கியது இல்லை. கடந்த 2020 டிரம்ப் முதல்முறை அதிபராக இருந்தபோது தான் அப்போது ஈரான் ராணுவ தளபதியாக இருந்த காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது. அப்போதில் இருந்தே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் தான். இந்த முறை அது மேலும் தீவிரமடைந்துள்ளது. கமேனியின் மரணத்திற்கு பழிவாங்கியே தீர வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளன.














Click it and Unblock the Notifications