ஐப்பசி மாத ராசி பலன்: மிதுன ராசியினருக்கு பணவரவு அதிகரிக்கும்.. ஆனால் பேச்சில் கவனம்

Subscribe to Oneindia Tamil

ஐப்பசி மாத பலன்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆவணி மாதம் மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

aippasi-month-rasi-palan-what-kind-of-benefits-will-mithunam-rasi-people-gemini-get-this-aippasi

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினர் பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். 5 ஆம் இடத்தில் சூரியன் நீச்சமாக இருப்பதால் அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மையைத் தரும். பிள்ளைகள் வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல சொல்வது நல்லது.

பேச்சில் கவனம்

குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் வரும் ஐப்பசி மாதத்தில் இருந்து அடுத்த 18 மாதங்களுக்கு மிகுந்த கவனம் தேவை. 2 இல் கேது 8 இல் ராகு வருவதால் வார்த்தைகளில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அடுத்த 18 மாதத்துக்கு லாட்டரி அடிக்கக் கூடிய யோகம் உண்டாகும்.

பணவரவு

பணவரவு அற்புதமாக இருக்கும். வீடு வாங்குவது, வீடு விற்பது போன்ற அமைப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பிஎஃப் பிரச்சனைகள் தீரும். வழக்குகள் எல்லாவற்றிலும் வெற்றி ஏற்படும். நிறைய நன்மைகள் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றமும், மாற்றமும் உண்டாகும்.

ஆரோக்கியம்

பிள்ளைகளிடம் தேவையில்லாமல் பிரச்சனைகள் வைத்துக் கொள்ளக் கூடாது. வயிறு தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கிட்னி ஸ்டோன் இருப்பவர்கள் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம். அசிடிட்டியால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. உணவு விஷமாகும் தன்மை உள்ளதால் கவனம் தேவைய பயணங்களின்போது காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காசு பணத்திற்குப் பஞ்சங்கள் ஏற்படாது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். யாரிடம் பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசுவது நல்லது. ஐப்பசி மாதத்தில் வயிறு தொடர்பான பாதிப்புகள் அதிகம் வருவதால் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை மனதாரா வழிபாடு செய்வது சகலவித நல்ல முன்னேற்றங்களையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+