பெரிய நெருக்கடியில் சிக்கப்போகும் டிரம்ப்.. 2008 மீண்டும் திரும்புது! அமெரிக்காவுக்கு ஆப்பு!
வாஷிங்டன்: நான்தான் இங்க எல்லாமே! என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு 2008ல் பெரிய இடி விழுந்தது. அதன் பாதிப்பு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிரொலித்தது. தற்போது இதேபோன்ற பாதிப்பை நோக்கி அமெரிக்கா சென்றுக்கொண்டிருக்கிறது.
2008ல் மிகப்பெரிய மந்த நிலை ஏற்பட்டது. அமெரிக்க மக்கள் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்தார்கள். இப்போது நடப்பதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, மீண்டும் இதே போன்ற சூழல் உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

காரணம் என்ன?
ஈரான் போரில் செய்து வரும் செலவுகள்தான் இதற்கு காரணம். செலவு எனில் கொஞ்ச, நஞ்சம் கிடையாது. சுமார் $25 பில்லியன் (சுமார் ₹2.1 லட்சம் கோடி) செலவாகியுள்ளதாக பென்டகன் அதிகாரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ரூ.2 லட்சம் கோடி என்பது பெரிய தொகை. தமிழகத்தின் 2024-25 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் மதிப்பீடே சுமார் ₹4 லட்சம் கோடிக்கும் சற்று அதிகம்தான். அப்படியென்றால், ₹2 லட்சம் கோடி என்பது தமிழகத்தின் ஓராண்டு மொத்த வருவாயில் பாதியாகும்.
தமிழ்நாட்டின் பட்ஜெட்டை விட அதிகம்
ஆனால், விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பென்டகன் அதிகாரி சொன்னது சும்மா மேலோட்டமான செலவுகள்தான். உண்மையாகவே இந்த போரில் அமெரிக்கா 40-50 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்திருக்கலாம் என சிஎன்என் (CNN) தெரிவித்திருக்கிறது. இந்திய மத்திப்பில் ரூ.4.20 லட்சம் கோடி. இது தமிழ்நாட்டின் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம்.
இவ்வளவு செலவையும் செய்துவிட்டு, மறுபுறம் கடுமையான சேதங்களையும் அமெரிக்கா எதிர்கொண்டிருக்கிறது. அதாவது மத்திய கிழக்கில், பஹ்ரைன், குவைத், ஈராக், அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள குறைந்தது 9 அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எப்படி இது நடந்தது?
ஈரான் மிகக் குறைந்த விலையுள்ள ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் மிக விலையுயர்ந்த ஆயுதங்களை வீணடிக்கச் செய்கிறது என்பதுதான் செலவுக்கு காரணம்.
அதாவது, ஈரான் பயன்படுத்தும் ஒரு 'ஷாஹெட்' (Shahed) ட்ரோனின் விலை வெறும் $50,000 (ரூ.42 லட்சம்). ஆனால், அதைச் சுட்டு வீழ்த்த அமெரிக்கா பயன்படுத்தும் ஒரு 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணையின் விலை $4 மில்லியன் (ரூ.33.6 கோடி).
வீண் செலவு
கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்கா 600 ஏவுகணைகளை மட்டுமே உற்பத்தி செய்த நிலையில், கடந்த எட்டு வாரப் போரில் 1,200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏற்கனவே பயன்படுத்திவிட்டது. தலா $3.6 மில்லியன் மதிப்புள்ள 1,000-க்கும் மேற்பட்ட டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது இல்லாமல் மற்றொருபுறம், ஈரானின் தாக்குதலால் தலா $500 மில்லியன் முதல் $1 பில்லியன் வரை மதிப்புள்ள AN/TPY-2 ரேடார்கள் சேதமடைந்துள்ளன. இவற்றின் இழப்பு அல்லது பழுதுபார்க்கும் செலவுகள் இன்னும் கணக்கில் சேர்க்கப்படவில்லை. போர் நடைபெறும் நாடுகளில் உள்ள சிவில் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும்.
சீன் போடும் டிரம்ப்
போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஈரானின் இரண்டாவது அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவையும் ட்ரம்ப் நிராகரித்துவிட்டு, குறுகிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு போர் வீரர் போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, இனிமேல் அமைதியாக இருக்க முடியாது என்று சீன் போட்டிருக்கிறார். அப்படியெனில், போர் நீடித்தால் அமெரிக்காவுக்குதான் இன்னும் அதிகமாக செலவாகும்.
2008 திரும்புது
2008-ல் பணப்புழக்கம் குறைந்ததால் மந்தநிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி உயர்கிறது. அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோல் 4 டாலரைத் தாண்டியுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $120-ஐ நெருங்கியுள்ளது. இது 2022-க்குப் பிறகு மிக உயர்ந்த விலையாகும்.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் முடங்கியுள்ளது, இது 2008-ஐ விட மோசமான ஒரு எரிசக்திப் போர் சூழலை உருவாக்கியுள்ளது. இன்னும் போர் நீடித்தால், அமெரிக்காவின் கதை முடிந்துவிடும் என நிபுணர்கள் வார்னிங் கொடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications