ஆர்வக்கோளாறு.. ரீல்ஸ் மோகம்.. என்ன சாதிச்சீட்டிங்க? பத்திரிகையாளர் லட்சுமணன் காட்டம்! வீடியோ
சென்னை: "அமைச்சர்களின் ஆர்வக்கோளாறு.. ரீல்ஸ் மோகம்.." என அமைச்சர் கீர்த்தனாவின் செயலை மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் விமர்சித்துள்ளார். மேலும் கூறிய அவர், "ஆங்கிலம் தெரியாதது பெரிய குற்றமா? தமிழ் நல்லா தெரிந்தால் அதை விட பெருமை எதுவும் இல்லை என்று நான் சொல்வேன். ரீல்ஸ் மோகத்தில் போய் விழுகாதீங்க.. கீர்த்தனாவுடைய பொன்னாகவோ, தங்கையாகவோ இருந்து இருந்தால் இப்படி வெளியில் விட்டு அசிங்கப்படுவதை வேடிக்கை பார்ப்போமா.. அதனால் நீங்க என்ன சாதிச்சீங்க.." என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் அமைச்சர்களின் செயல்பாடு பற்றி காட்டமாக பேசியுள்ளார். இது பற்றி ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு அவர் கூறியதாவது:-

அசிங்கப்படுவதை வேடிக்கை பார்ப்போமா..
ஆர்வக்கோளாறு, ரீல்ஸ் எடுக்கனும், அது வெளியில் வரவேண்டும் என்ற அந்த போதையில் சிக்கியதன் விளைவுதான் அது. அது தனிநபராக இருக்கட்டும் அமைச்சர்களாகட்டும்.. எல்லா கட்சியிலும் அந்த மோகம் இருக்கும். அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு கொஞ்சம் கட்டுப்பாடு அவசியம். மாண்புமிகு அமைச்சர்தான். மாண்புக்கு பின்னாடி ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது. பொறுப்புகள் இருக்கிறது.
எம்.எல்.ஏக்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தியது போல அமைச்சர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தினால் தவறு அல்ல.. பொதுவெளியில் எதை பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்த பொண்ணுக்கு ஆங்கிலம் தெரியுதோ? தெரியலயோ?.. அதை வீடியோ எடுத்து உலகம் முழுக்க பார்ப்பது போல செய்வது ஏன் என்றுதான் கேட்கிறோம். கீர்த்தனாவுடைய பொன்னாக இருந்து, அவருடைய தங்கையாக இருந்து இருந்தால் இப்படி வெளியில் விட்டு அசிங்கப்படுவதை வேடிக்கை பார்ப்போமா.. அதனால் நீங்க என்ன சாதிச்சீங்க.. நான் ரீல்ஸ் எடுக்கவில்லை, ஊடகங்கள் என்றால், ஊடகங்கள் எதற்காக வகுப்பறைக்குள் போக வேண்டும்.
ரீல்ஸ் மோகத்தில் போய் விழுகாதீங்க
ஊடகங்கள் வந்தால் கூட அவர்களை வெளியில் நிறுத்தியிருக்க வேண்டும். அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதுதானே.. வகுப்பறைக்குள் போய் ஊடகங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. ஏனென்றால் அதை எடுத்து, அதை காட்சிப்படுத்துவதில் அதை அனுபவித்து ரசித்ததன் விளைவுதான் இன்று அதை மறுப்பதற்காக தவியாய் தவிக்கிறார்கள். இது ஒரு நல்ல பாடம். கீர்த்தனாவுக்கு மட்டுமில்லை. இதுபோன்ற செயலை செய்ய துணிகிறவர்களுக்கும் ஒரு நல்ல பாடம்.
அந்த இடத்தில் அந்த பொண்ணை உங்கள் பொண்ணாக, உங்க தங்கச்சியாக நினைத்து பாருங்கள்.. அமைச்சர் இடத்தில் இருக்கும் யாரும் செய்ய மாட்டார்கள். ஊடகத்தினரும் செய்ய மாட்டார்கள். ரீல்ஸ் எடுத்து என்ன சாதிச்சீங்க.. ஆங்கிலம் தெரியாதது பெரிய குற்றமா? தமிழ் நல்லா தெரிந்தால் அதை விட பெருமை எதுவும் இல்லை என்று நான் சொல்வேன். ரீல்ஸ் மோகத்தில் போய் விழுகாதீங்க..
அமைச்சர்க்ளை பார்த்து எம்.எல்.ஏ செய்கிறார். எம்.எல்.ஏவை பார்த்து அதிகாரமே இல்லாத ஒன்றிய செயலாளர் போய் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். எந்த காலத்தில் இதெல்லாம் நடந்தது. இப்போ ஒரு வாரம் 10 நாளில்தான் கொஞ்சம் குறைந்துள்ளது. நல்ல விஷயங்களை வீடியோ பதிவாக போடுங்க.. யாரும் ஒன்றும் சொல்ல போவது இல்லை" என்று கூறினார்.














Click it and Unblock the Notifications