கிரிஷ் சோடங்கருக்கு பதிலாக இனி இவர்.. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக குலாம் அகமது மீர்!
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக குலாம் அகமது மீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஸ் சோடங்கர் கோவா மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் வகித்த பொறுப்புக்கு காஷ்மீரை சேர்ந்த குலாம் அகமது மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் அகமது மிர் ஜம்மு காஷ்மீரின் தூரு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அம்மாநில முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போது, குலாம் அகமது மீர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஸ் சோடங்கர் கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக குலாம் அகமது மீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, மேற்கு வங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக பிரகாஷ் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications