மதுரை மக்களின் கனவு.. ஆகஸ்ட் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு? அதிகாரிகள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் மாணவர்களுக்கான விடுதிகள் 90 சதவிகிதம் வரை முடிவடைந்துவிட்ட சூழலில், இன்னும் 45 மாதங்களுக்குள் அனைத்து பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினாலும், ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவன நிதியுதவியுடன் 2024ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தான் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இதன் பணிகளை3 ஆண்டுகளில் முடிக்க முடிவு செய்யப்பட்டது.

Madurai AIIMS

அதற்கேற்ப மருத்துவமனை வளாகம், மருத்துவக் கல்லூரி, மாணவர்களுக்கான விடுதிகள், ஆய்வகங்கள், வெளி நோயாளிகள் பிரிவு ஆகிய முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் 2ஆம் கட்டத்தில் உள் நோயாளிகள் சிகிச்சைக்கான முதன்மை மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. மொத்தமாக 24 கட்டிடங்கள் இந்த வளாகத்தில் அமைய உள்ளன.

இந்த மருத்துவமனையில் 900 படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளன. தொற்று நோய் சிகிச்சைக்கு மட்டும் 150 படுக்கைகள் தையாக ஒதுக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல் விளையாட்டு திடல், நிர்வாகிகளுக்கான குடியிருப்பு வசதிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 4ஆம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி பெற்று வருகின்றனர். கல்லூரி மற்றும் விடுதி கட்டிடப் பணிகள் 90 சதவிகிதம் வரை நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 10 சதவிகித பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் புதிய வளாகத்தில் முழுமையாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலேயே எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டால், அது தென் மாவட்ட மக்களின் மருத்துவ வசதிகளுக்கு மிகப்பெரிய பங்காற்றும். சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களின் கனவாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+