Tanishq: ஒரே நாளில் 3 வேடங்கள்! மதுரை தனிஷ்க் கொள்ளையில் சிக்கிய பழங்காநத்தம் பட்டதாரி இளைஞர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பழங்காநத்தத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்த் கிருஷ்ணா என்பவர் வீட்டில் காவல் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் நேரில் ஆய்வு செய்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் அருகே தனிஷ்க் நகைக் கடையில் கடந்த வியாழக்கிழமை மர்மநபர்கள் 15 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து எஸ்.எஸ். நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

madurai tanishq

அங்கு கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரே ஒரு நபர் மட்டுமே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த கடை தொடங்கப்பட்டு 15 நாட்கள்தான் ஆகிறதாம். அங்கு இன்னும் கட்டடப் பணிகள் நடைபெறுகிறது.

மொட்டை மாடி

இதனால் கடையின் பின்புறம் இரும்பு சாரம் இருக்கிறது. அதை பயன்படுத்திய கொள்ளையன் அந்த இரும்புச் சாரம் மூலம் மொட்டை மாடியில் இருந்து தரைதளத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து லிப்டில் உள்ள கம்பிகளை பிடித்துக் கொண்டு நகைகள் இருக்கும் முதல் மாடிக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

9 தனிப்படைகள்

அவரை பிடித்த 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கொள்ளையன் ஒரு ஸ்கூட்டி வாகனத்தில் வந்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த ஸ்கூட்டி வாகனத்தை போலீஸார் தேடி வந்தனர்.

பழங்காநத்தம் பகுதி

இந்த நிலையில் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது வீட்டில் இரவு முழுக்க சோதனை மேற்கொள்ளப்பட்டு லேப்டாப், விலங்குகளை சுடும் போலி துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவரது வீட்டில் பதுக்கி வைத்தாரா அல்லது அங்கிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

டிசி விசாரணை

மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் நேரில் சென்று நிஷாந்த் கிருஷ்ணாவின் வீட்டில் விசாரணை மேற்கொண்டார். மாடக்குளம் காட்டு பகுதியில் பதுக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

போலீஸார் சோதனை

அது போல் கண்மாய், கோபாலி மலையை சுற்றிய பகுதிகள், வயல்வெளி, தோப்புகள், ரயில்வே தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் எங்காவது புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் தேடி வருகிறார்கள்.

பழங்காநத்தம் பட்டதாரி இளைஞர் நிஷாந்த், அந்த கடைக்கு ஒரே நாளில் 3 முறை வந்துள்ளாராம். அப்போதெல்லாம் கடையை நோட்டமிட்டவாறே இருந்தாராம். அது போல் 3 முறையும் வெவ்வேறு வேடங்களில் வந்தாராம். ஒரு முறை முகக் கவசம் அணிந்து கொண்டு மறு முறை கையில் கட்டு கட்டியபடியும் வந்தாராம்.

5 முறை நகைக் கடைக்கு வந்தார்

அது போல் இதுவரை இந்த நகைக் கடைக்கு அவர் 5 முறை வந்துள்ளதால் அவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் முகமே தெரியாதபடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஸ்கூட்டி வாகனம் கிடைத்தால் விசாரணைக்கு மேலும் உதவியாக இருக்கும் என போலீஸார் கருதுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+