மன்னித்து விடுங்கள்.. மைக்ரோசாப்ட் முடங்கியது ஏன்? எப்போதும் சரியாகும்? நிறுவனம் தந்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் நேற்று அதிகாலை முதல் முடங்கியதால் ஐடி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியது ஏன்? எப்போது சரியாகும்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்து வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ், அவுட்லுக் 365, டீம்ஸ், எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட சேவைகளை ஏராளமான ஐடி நிறுவனங்கள், விமான நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.

microsoft it industry

மைக்ரோசாப்ட்டின் அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365 மற்றும் டீம்ஸ் ஆகிய சேவைகள் உலகளவில் முடங்கின. இதனால் அதனை பயன்படுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

அமெரிக்கா, இந்தியா உள்பட பிற நாடுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளை நம்பி இருந்த ஐடி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் பாதிககப்பட்டன. அதேபோல் முன்னணி ஏஐ நிறுவனங்களான ஓபன் ஏஐ, மற்றும் ஆந்த்ரோபிக் ஆகியவற்றின் மைக்ரோசாப்ட் இணைப்புச் சேவைகளும் முடங்கின. இப்படி பல நிறுவனங்களின் பணிகள் ஸ்தம்பித்து போனது. இந்நிலையில் தான் நேற்று அதிகாலை முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகள் முடங்கின.

டவுன் டிரேட்டக்கர் இணையதளத்தின் டேட்டாப்படி மொத்தம் 70 நாடுகளை சேர்ந்தவர்கள் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அவுட்லுக் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனதாக கூறியுள்ளனர் விமான நிறுவனங்களை எடுத்து கொண்டால் மைக்ரேசாப்ட்டின் இ-மெயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை இந்தியாவின் இண்டிகோ,ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் உறுதி செய்தன. ஸ்பைஸ்ஜெட் சார்பில் டெல்லியில் இருந்து இயங்க வேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து பிரச்சனையை சரிசெய்வதற்கான பணிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கி மேற்கொண்டு வந்தது. ஆனால் பிரச்சனையை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் பல லட்சம் பேரின் பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மைக்ரோசாப்ட் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டதற்காக எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களிடம் நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். அவர்கள் எங்களின் சேவைகள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளதால் அதற்கான பொறுப்பை நாங்கள் எடுத்து கொள்கிறோம். நாங்கள் எங்களின் சேவையை மீட்டெடுத்து நிலையாக வழங்குவதை பார்க்கிறோம்.

இது சைபர் அல்லது ஏஐ ஏஜென்ட்டுகள் தொடர்பான பிரச்சனை அல்ல. மாறாக இது ஒரு தொழில்நுட்ப கோளாறாகும். சமீபத்திய நெட்வொர்க் மாற்றத்தை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையாகும். நாங்கள் அடிப்படையான பிரச்சனையை சரிசெய்துவிட்டோம். மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு அதிக நேரம் எடுத்தாலும் கூட சேவைகளை நிலையாக வழங்குவதை எங்களால் உறுதி செய்ய இது உதவியது. இந்த பணி முழுவதுமாக முடிவடைந்த பிறகு பிரச்சனை தொடரபான முழுமையான விவரம் வழங்கப்படம்'' என கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+