விஜய்யின் சொந்த கிராமத்தில் பயங்கரம்! இரவில் காரை அடித்து நொறுக்கி பெண்களை மிரட்டும் கூலிப்படை!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் காரை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அடித்து நொறுக்கிய கூலிப்படையினர், அப்பகுதி பொதுமக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை சேது நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு ராஜன். இவரது உறவினர் திருமண விழா நேற்று நடைபெற்றுள்ளது. திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய சுயம்பு ராஜன், தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.

ramanathapuram crime

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப், கிஷோர், முனீஸ், பஞ்சநாதன் உள்ளிட்ட நான்கு பேர், கூலிப்படையினருடன் வந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இரவில் காரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காரின் முன்பக்கக் கண்ணாடி, கதவுகள், டயர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாகச் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

ramanathapuram crime

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூச்சலிட்டதாகவும், அப்போது வீட்டில் இருந்த பெண்கள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டிவிட்டு, கூலிப்படை கும்பல் இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுயம்பு ராஜன் உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தங்களைக் குறிவைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் அந்தக் கும்பல் வந்ததாகவும், ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் காரை மட்டும் சேதப்படுத்திவிட்டுச் சென்றதாகவும் சுயம்பு ராஜன் தெரிவித்துள்ளார்.

ramanathapuram crime

தங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், தமிழக முதலமைச்சரின் சொந்த கிராமமான முத்துப்பேட்டை பகுதியில் வசிக்கும் தங்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, உரிய விசாரணை நடத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கண்ணீர் மல்க வீடியோ பதிவு செய்த பெண்கள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ramanathapuram crime

முத்துப்பேட்டை பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ramanathapuram crime

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவி வரும் நிலையில் முதல்வர் விஜய், தலைமைச் செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். தீபாவளி நேரத்தில் ஒரு எஸ்எஸ்ஐ உள்பட 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. ஒரு பக்கம் கொலை, கொள்ளை என்றால் மறுபக்கம் தவெகவினரே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் தற்போது கூலிப்படையினரின் அட்டூழியமும் வேறு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+