வீடு புகுந்து தாக்கிய கள்ளக்காதலனின் மனைவி, தாய்! குழந்தைகள் முன் கூனிகுறுகிய கீதா! விபரீதம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து தனது கள்ளக்காதலனின் மனைவியும் அவரது தாயும், தன் குழந்தைகள் கண் முன்னே தாக்குதல் நடத்தியால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், இளவம்பாடி பகுதியைச் சேர்ந்த மணி ராஜேஸ்வரியின் மகள் கீதா (27). இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம், சிம்மணபுதூர் சின்ன வட்டப்பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

krishnagiri crime

இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தையும் மற்றும் நான்கு வயது ஆண் குழந்தை உள்ளனர். மேலும் ரவிசங்கர் கோயமுத்தூரில் வேலை செய்வதால் கீதா தனியாக வசித்து வருகிறார். மேலும் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து மனைவியையும், பிள்ளையையும் பார்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரவிசங்கரின் உறவுக்காரரான ராஜுவ்குமார், கீதாவிடம் நெருங்கி பழகி வந்தார். நாளடைவில் ராஜூவ்குமார் மற்றும் கீதா ஆகிய இருவருக்கும் இடையே பழக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் தனிமையில் பல முறை வீட்டில் இருந்த சம்பவம் ரவிசங்கருக்கு தெரிய வந்தது. கீதாவை ரவிசங்கர் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடந்த நான்கு மாத காலமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கள்ளக்காதல் பிரச்சினை தொடர்பாக கீதா மற்றும் ராஜுவ்குமார் இருவரையும் நேரில் அழைத்துப் பேசி முற்றுப்புள்ளி வ வைக்க வேண்டும் என திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு ரவிக்குமார் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்தக் கள்ளக்காதல் விவகாரம் தொடர்ந்து நீடித்து வந்ததால் ராஜுவ்குமாரின் மனைவி மற்றும் அவருடைய தாய்க்கு இந்த விவகாரம் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கீதாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகாத வார்த்தைகளை பேசி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் இரண்டு குழந்தையின் கண் முன்னே நடைபெற்றதால் மனமுடைந்த கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கீதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் திருமணம் ஆகி 6ஆண்டுகள் ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பிணவறையின் அருகே வந்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது விசாரணை முடிந்து வெளியே செல்லும்பொழுது திடீரென தன்னுடைய மகளின் சாவுக்கு காரணமான ராஜுவ்குமார், அவரது குடும்பத்தினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கீதாவின் பெற்றோர் அவரது வாகனம் முன்பு விழுந்து கதறி அழுதனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கீதாவின் 5 வயது மகல், "ராஜுவ் குடும்பத்தினர் அம்மாவை அடித்தனர். ராஜுவின் சகோதரர் அம்மாவின் மொபைல் போனை பறித்துச் சென்றுவிட்டார்" என வாக்குமூலம் அளித்துள்ளார்.

வீடு புகுந்து தாக்கியதால் மன உளைச்சல் காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோட்டாட்சியர் வாகனம் முன்பு பெண்ணின் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+