சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு மாற முயன்ற பிரபல நிறுவனம்.. ஆச்சரியப்படுத்திய தமிழ்நாடுஅரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை : அஜிலிசியம் நிறுவனத்தின் ஆசியத் தலைமையகத்தை ஹைதராபாத்துக்கு மாற்றுவதற்கான திட்டத்தை ராஜ் பாபு என்பவர் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வராது என்று எதிர்பார்த்துள்ளார் ராஜ் பாபு. ஆனால் அவரை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தொடங்கி, அமைச்சர் கீர்த்தானா வரை ஏராளமானோர் அழைத்து பேசியிருக்கிறார்கள். தமிழகத்தில் நிறுவனத்தை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று நேரடியாக பேசியிருக்கிறது அரசு. தலைமை செயலகம் வரை அழைத்து பேசியிருக்கிறது. இதனால் ராஜ்பாபு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவினை அப்படியே பார்ப்போம்..

"இப்படியொரு நாளை நான் எதிர்பார்க்கவில்லை. இதற்காக பொதுவெளியில் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

CEO s experience to move Ajilisium s Asian headquarters to Hyderabad TN s heart-touching response

அக்டோபர் 27ஆம் தேதி, Agilisium நிறுவனத்தின் ஆசியத் தலைமையகத்தை ஹைதராபாத்துக்கு மாற்றுவதற்கான திட்டத்தை அறிவித்தோம். இந்த அறிவிப்புக்கு தமிழகத்திலிருந்து நேரடியாக எந்தப் பதிலும் வராமல் போகலாம் என்று நினைத்தேன்.

ஆனால், மறுநாள் காலை 8 மணிக்கே Guidance Tamil Nadu அமைப்பைச் சேர்ந்த அருண் ஜார்ஜ் மேத்யூ என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். தமிழகத்தில் எங்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மாநில அரசு எவ்வாறு உதவ முடியும் என்று கேட்டார்.

காலை 11 மணிக்குள், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் எஸ். விஜயகுமார், ஐஏஎஸ் மற்றும் Guidance Tamil Nadu அமைப்பின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபக் ஜேக்கப், ஐஏஎஸ் ஆகியோருடன் பேசினேன்.

பிற்பகல் 1 மணிக்கு டாக்டர் விஜயகுமார் மீண்டும் என்னைத் தொடர்புகொண்டார். இந்த முறை தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத்தும் தொலைபேசியில் இணைந்திருந்தார்.

சிறிய அறிமுகத்துக்குப் பிறகு, அமைச்சர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். தமிழகத்தில் எங்களது நிறுவனத்தை மேலும் வளர்க்கவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

தமிழகத்தில் எங்கள் நிறுவனத்தில் ஏற்கெனவே சுமார் 900 பேர் பணியாற்றுவதாகவும், கோவை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிறுவனத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தேன். அடுத்த மூன்று ஆண்டுகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை 2,000 முதல் 3,000 வரை உயர்த்த முடியும் என்றும் கூறினேன்.

இதோடு டாக்டர் விஜயகுமார் நின்றுவிடவில்லை. நவம்பர் 6ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார். அவருடன் தீபக் ஜேக்கப்பும் இருந்தார். GWC Data.AI நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி நவீன் குமாரும் என்னுடன் வந்திருந்தார்.

உயர்ந்த ஊதியம் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை அதிக அளவில் தமிழகத்தில் உருவாக்குவதற்கு தொழில்முனைவோர் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தோம்.

இந்தச் சந்திப்பின்போதே, ஐஏஎஸ் அதிகாரி வாகே சங்கெட் பல்வந்த் மற்றும் மூத்த பொது மேலாளர் ஆர். கார்த்திகேயன் ஆகியோரையும் அவர் அழைத்துப் பேச வைத்தார். சுகாதாரம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பாக எனது கருத்துகளையும் கார்த்திகேயன் கேட்டறிந்தார்.

நான் யாரையும் அணுகவில்லை. அவர்கள்தான் என்னைத் தொடர்பு கொண்டார்கள். நேரடியாகக் கேள்விகளைக் கேட்டார்கள். எங்கள் கருத்துகளைக் கேட்டறிந்தார்கள். அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் அதே நாளில் முன்னெடுத்தார்கள். யாரும் தங்களது பதவியைப் பற்றிப் பேசவில்லை. ஒவ்வொரு உரையாடலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையே மையமாகக் கொண்டிருந்தது. கடந்த 12 ஆண்டுகளாக Agilisium நிறுவனத்தை நடத்தி வரும் எனக்கு இதுபோன்ற அனுபவம் இதுவரை கிடைத்ததில்லை. நமது தலைவர்களிடமும், அரசு நிர்வாகத்திடமும் நாம் எதிர்பார்க்க வேண்டிய அணுகுமுறை இதுதான்.

முதலீட்டாளர்கள் தங்களைத் தேடி வரும்வரை காத்திருக்காமல், அவர்களாகவே தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டும். அதிகாரத்தை முன்னிறுத்திப் பேசாமல், தங்களால் எப்படி உதவ முடியும் என்று கேட்க வேண்டும். ஒரு கூட்டத்துடன் நிறுத்திவிடாமல், அடுத்தகட்ட சந்திப்புகளையும் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகளில் வேலைவாய்ப்புகளையும் திறமையான மனிதவளத்தையும் ஈர்ப்பதில் ஒரு மாநிலம் எவ்வாறு வெற்றி பெறுகிறது என்பது இதுபோன்ற செயல்பாடுகளில்தான் அடங்கியிருக்கிறது. இந்த வாரம் நான் சந்தித்த அதிகாரிகளும் அமைச்சரும் அந்தப் பாதையில் செயல்பட்டு வருகின்றனர்.அரசு தவறு செய்யும்போது விமர்சிக்க நாம் தயங்குவதில்லை. அதேபோல், அரசு சிறப்பாகச் செயல்படும்போதும் அதைப் பாராட்ட வேண்டும்.

ஒவ்வொரு நிறுவன நிறுவனரும், தொழில்துறை தலைவரும் இந்தக் குழுவுடன் தொடர்புகொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இந்த அணுகுமுறையுடன் செயல்பட்டு வரும் டாக்டர் எஸ். விஜயகுமார் மற்றும் அமைச்சர் கீர்த்தனா சம்பத் ஆகியோருக்கு நன்றி. தீபக் ஜேக்கப், வாகே சங்கெட் பல்வந்த், அருண் ஜார்ஜ் மேத்யூ, ஆர். கார்த்திகேயன் மற்றும் தொழில்துறைத் துறை, Guidance Tamil Nadu அமைப்பின் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி.
தமிழகம்தான் எனது சொந்த மண். இங்கேயே எங்கள் நிறுவனத்தை மேலும் வளர்க்க விரும்புகிறோம். இந்தச் சந்திப்பில் என்னுடன் இணைந்துகொண்ட நவீனுக்கும் நன்றி.Agilisium நிறுவனத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் ஸ்ரீவத்சன் ஸ்ரீதரன் மற்றும் நாஹா ஆகியோருக்கும் நன்றி" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+