கள்ளக்குறிச்சியில் அடுத்த ஷாக்.. ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட பெண் அனுபவித்த கொடுமை! இறந்த பிறகும் சோகம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போர்வெல் பிரச்சனையில் 5 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 56 வயது பெண் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை கிராமத்தின் வழியாக எடுத்து செல்லவும், கிராமத்தில் பொதுவாக உள்ள சுடுகாட்டில் வைத்து இறுதி சடங்கு செய்யவும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையை அடுத்த தாழ்வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் (வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர் தனபாக்கியம் (56).

kallakurichi

இவர்களுக்கு செல்வி என்ற மகளும், செந்தில்குமார், பாலகிருஷ்ணன் என்ற மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் தான் சின்னையன் - தனபாக்கியம் குடும்பத்தை அந்த கிராம கவுண்டன் கங்காணிகள் எனப்படும் கிராம முக்கியஸ்தர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் தான் தனபாக்கியம் உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இறந்தார்.

தனபாக்கியத்தின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அப்போது அவரது உடலை கிராமத்தின் வழியாக எடுத்து செல்லவும், கிராமத்தில் உள்ள பொதுவான சுடுக்காட்டில் வைத்து இறுதி சடங்கு செய்யவும் கிராம முக்கியஸ்தர்கள் அனுமதி வழங்கவில்லை. அதுமட்டுமின்றி தனபாக்கத்தின் இறுதி சடங்கில் யாரும் பங்கேற்க கூடாது. மீறி பங்கேற்றால் அவர்களையும் கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைப்போம் என்று மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தனபாக்கியத்தின் இறுதி சடங்கில் அந்த கிராம மக்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி தனபாக்கியத்தின் உடலை அவரது குடும்பத்தினர் சொந்த விவசாய நிலத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து இறுதி சடங்கு செய்து புதைத்தனர். இந்த துக்க நிகழ்வில் தாழ்வாழப்பாடி கிராமத்தை சேர்ந்த ஊர் மக்கள் யாரும் பங்கேற்கவில்லை. கிராம முக்கியஸ்தர்கள் சொன்னதை கேட்டு அவர்கள் ஒதுங்கி கொண்டனர். மாறாக தனபாக்கியத்தின் வெளியூர் சொந்தக்காரர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+