4,000 விமானங்கள் ரத்து..10,000 விமானங்கள் தாமதம்.. அமெரிக்காவை அலறவைத்த 4.22 மணிநேரம்! என்ன நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்காவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனையால் மொத்த விமான சேவைகளும் முடங்கியது. தற்போது பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. 4 மணிநேரம் 22 நிமிடத்தில் மொத்தம் 4 ஆயிரம் விமானங்கள் ரத்தான நிலையில் 10 ஆயிரம் விமானங்கள் தாமதமாக கிளம்பி உள்ளன. இதனால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி மாலை 3.54 மணிக்கு திடீரென்று அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. அந்த நாட்டின் 22 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது.

இந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்கள் தான் விமானங்களுக்கு வழிக்காட்டுவது, முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் தகவல் தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. விமான நிலையங்களில் ஆங்காங்கே விமானங்கள் நிறுத்திப்பட்டன. ஓடுபாதைகளில் இருந்து புறப்பட தயாராக இருந்த விமானங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பல லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டன.
இதனால் தகவல் தொடர்பு பிரச்சனையை சரிசெய்யும் பணியில் டெக்னீசியன்கள் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேரம் 22 நிமிடங்கள் வரை போராடிய பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது. ஆனால் அதற்கும் நாடு முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் தாமதமதாக புறப்பட்டு சென்றன. இந்த விமான சேவைகளில் ஏற்பட்ட பிரச்சனையால் அமெரிக்காவில் சுமார் 15 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் ஹேப்பியாகி உள்ளனர். இதுபற்றி அமெரிக்காவின் போக்கவரத்து துறை அமைச்சர் சீன் டப்பி கூறுகையில், ''அமெரிக்காவின் வான்வெளியில் மீண்டும் விமானங்கள் பறக்க தொடங்கி உள்ளது. இந்த பிரச்சனைக்கு பழைய ஹார்ட்வேர் தான் முக்கிய காரணமாகும். இதனால் தான் நாட்டில் உள்ள 22 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தகவல் தொடர்பு பிரச்சனை ஏற்பட்டது. தற்போது அது சரிசெய்யப்பட்டு மீண்டும் விமான சேவைகள் தொடங்கி உள்ளன'' என்றார்.
அதேபோல் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க்வெய்னி முள்ளின் கூறுகையில், ''விமான சேவைகள் முடங்கியதற்கு சைபர் அட்டாக் காரணம் இல்லை. அதேபோல் மைக்ரோசாப்ட் முடக்கத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. தகவல் தொடர்பு பிரச்சனையால் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது'' என்றார்.


Click it and Unblock the Notifications
