ஸ்பெயின் vs அர்ஜென்டினா.. 60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்கும் யுத்தம்.. 1966ல் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

நியூ ஜெர்சி: ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகள் விளையாட உள்ளன. இதற்கு முன்பாக ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் 1966ஆம் ஆண்டு மட்டுமே இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருக்கின்றன. அந்த போட்டியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி தரமான சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறது. அதிலும் கடைசி 7 நிமிடங்களில் அர்ஜென்டினா 2 கோல்களை அடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Lionel Messi

இதனால் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. யூரோ கோப்பை சாம்பியனும், கோபா அமெரிக்கா சாம்பியனும் ஃபிஃபா உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக மோதுவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் யார் பெருசுனு அடிச்சுக் காட்டு என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இதனிடையே அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இதற்கு முன்பாக உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார்களா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் ஒரேயொரு முறை மட்டுமே அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் விளையாடி இருக்கின்றன.

1966ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தியது. அந்த காலத்தில் ஸ்பெயின் அணி அவ்வளவு வலிமையான அணி கிடையாது. இதன்பின் நடந்திருக்கும் நட்பு ரீதியிலான போட்டிகளில் இரு அணிகளுமே மாறி மாறி வென்றுள்ளன. அதேபோல் ஸ்பெயின் அணி 2010 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரை வென்றது.

இதன்பின் ஸ்பெயின் அணி இப்போதுதான் ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அர்ஜென்டினா அணி டிஃபெண்டிங் சாம்பியனாக களமிறங்குகிறது. ஏற்கனவே 3 முறை அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றுள்ள சூழலில், இம்முறையும் வெல்ல தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+