விண்வெளி பயணத்தை தொடங்கிய இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்.. யார் இவர்? என்ன செய்ய போகிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலம் பாலக்கட்டை பூர்வீகமாக கொண்ட சங்கரமேனன் என்பவரின் மகனும், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவருமான அனில் மேனன் விண்வெளி ஆய்வுக்கு சென்றுள்ளார். தனது முதல் விண்வெளி பயணத்தில், ரஷ்ய வீரர்கள் மூன்று பேருடன் பயணத்தை தொடங்கியுள்ளார். சுமார் 8 மாதங்கள் விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, நுண்ணீர்ப்பு விசையில் உடலியல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய இருக்கிறார். அடிப்படையில் இவர் மருத்துவமும் பயின்றவர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன். இவர் ரஷியாவின் சூயஸ் எம்.எஸ் 29 என்ற விண்கலம் வாயிலாக தனது முதல் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளார். விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் அவ்வப்போது சுழற்சி முறையில் மாற்றப்படுவார்கள்.

Indian Origin Astronaut Anil Menon Begins Maiden ISS Mission Kerala s Joy

இந்திய வம்சாவளி

அதாவது புதிய விண்வெளி வீரர்கள் வருகை தருவதும் ஏற்கனவே இருந்த வீரர்கள் பூமி திரும்பும் பணிகளும் நடைபெறும். தற்போது மூன்று விண்வெளி வீரர்களை ரஷ்யா தனது விண்கலத்தில் அனுப்பியுள்ளது. கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் விண்வெளி தளத்தில் இருந்து அவர்கள் விண்வெளி புறப்பட்டனர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் நாசா விண்வெளி வீரருமான அனில் மேனன் மட்டுமின்றி அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகிய விண்வெளி வீரர்களும் புறப்பட்டுள்ளனர்.

என்ன ஆய்வு மேற்கொள்கிறார்?

அனில் மேனன் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 மாதங்கள் தங்கியிருந்து தங்கள் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். அறிவியல் பூர்வமான மற்றும் தொழில் நுட்ப ரீதியிலான ஆய்வுகளை முடித்துக்கொண்டு 2027 ஆம் ஆண்டு இந்தக் குழு பூமிக்கு திரும்ப உள்ளது. கஜகஸ்தான் நேரப்படி இரவு 8.17 மணிக்கு விண்ணுக்கு புறப்பட்ட இந்த விண்கலம் மூன்று மணி நேரத்தில் சுற்றுவட்டப்பாதையில் உள்ள விண்வெளி நிலையத்தை சென்றடையும்.

விண்வெளியில் மனிதர்களின் உடல் எந்த அளவு ஏற்றுக்கொள்கிறது, ரத்த ஓட்டம் எப்படி உள்ளது, நரம்பு கட்டமைப்பு உள்ளிட்டவை நுண்ணீர்ப்பு விசையில் எப்படி மாறுபடுகிறது என்பது பற்றிய ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

யார் இந்த அனில் மேனன்?

அனில் மேனன் பெற்றோர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நிலையில், அனில் மேனன் அங்கேயே பிறந்தார். அனில் மேனன் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜி படித்துள்ளார். ஸ்டாண்ட் போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டமும் பெற்றுள்ளார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிலும் முதுகலை பட்டம் முடித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் முதல் ஃபிளைட் சர்ஜனாகவும் மெடிக்கல் டைரக்டராகவும் இவரே இருந்தார். அமெரிக்க விமானப்படையிலும் இவர் பணியாற்றியுள்ளார். 49 வயதான அனில் மேனன் விண்வெளி பயணம் மேற்கொண்டதை கேரளாவிலும் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+