இந்த சாப்பாடு வேண்டாம்! செந்தில் பாலாஜி சொன்ன வார்த்தை! அடுத்து அமலாக்கத்துறை என்ன செஞ்சது தெரியுமா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை சொன்னதை விட கூடுதல் நேரம் செந்தில் பாலாஜி விசாரணை செய்யப்பட்டு இருக்கிறார்.
அதாவது காலை 3 மணி நேரம், பிற்பகல் 3 மணி நேரம், மாலை 3 மணி நேரம் என்று கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு மேல் செந்தில் பாலாஜி விசாரணை செய்யப்பட்டு இருக்கிறார்.

என்ன வழக்கு: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
இதன் அடிப்படையில் கைதான் அவரிடம்.. அது தொடர்பாகவே கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறதாம். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படுவது தொடர்பாகவே அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறதாம்.
கேள்விகள்: தினமும் 50 கேள்விகள் குறைந்தபட்சம் கேட்கப்படும். இதில் செந்தில் பாலாஜி சரியாக பதில் அளிக்காத நிலையில் அவரின் கஸ்டடியை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அவர் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தங்கி உள்ளார். அங்கே உள்ளே விசாரணை கைதிகளுக்கான அறையில் அவர் உள்ளார். ஆனால் விசாரணைக்கு சாஸ்திரி பவனில் இருக்கும் விசாரணை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். இதுதான் தினசரி நடைமுறை. இரண்டிற்கும் இடையே ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ளதால் பயண நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே. தினமும் இங்கிருந்து அங்கே பயணம் செய்து விசாரணை செய்வார்கள்.
உணவு: இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜிக்கு காலையில் இட்லி மற்றும் சட்னி வடையோடு வழங்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து பிற்பகல் மினி மீல்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி எனக்கு மினி மீல்ஸ் வேண்டாம் என்றுள்ளார்.
நிறைய சாப்பிட முடியாது என்று செந்தில் பாலாஜி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் தயிர் சாதம் மட்டும் கொடுங்கள் போதும் என்றுள்ளார். இதை அமலாக்கத்துறையினர் ஏற்றுக்கொண்டனர். அதையடுத்து அவருக்கு தயிர் சாதம் அருகில் இருந்த பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது.
இதை சாப்பிட்ட உடன் அவரிடம் மீண்டும் பிற்பகல் விசாரணை செய்யப்பட்டு உள்ளது . மாலையில் ஒரே ஒரு பிளாக் டீ குடித்து இருக்கிறார். அதன்பின் இரவு உணவு வரை விசாரணை நடைபெற்று உள்ளது. இரவு உணவிற்கு சப்பாத்தி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications