பலாத்காரம் செஞ்சுடுவேன் என மிரட்டும் நபர்.. போன் நம்பரை குறிப்பிட்டு குஷ்பு போலீசில் புகார்
சென்னை: நடிகர் குஷ்பு தன்னை ஒருவர் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று அடிக்கடி மிரட்டுவதாக செல்போன் நம்பரை குறிப்பிட்டு கொல்கத்தா போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகை குஷ்பு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் பிரபலம் ஆவார். இவரது பல ட்விட்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. விவாதத்தையும் உருவாக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை போட்ட ஒரு ட்விட் மிகவும் சர்ச்சையாகி உள்ளது.

கொல்கத்த நபர்
அப்படி என்ன அந்த டுவிட் பதிவில் போட்டுள்ளார் என்று பார்த்ததால், தனக்கு ஒரு நம்பரில் இருந்து நிறைய பலாத்கார மிரட்டல் வருகிறது. சஞ்சய் ஷர்மா என்பவரின் அந்த தொலைப்பேசி அழைப்பு கொல்கத்தாவில் இருந்து வருகிறது. எனவே கொல்கத்தா போலீசிடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரம் அந்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற பெண்களின் நிலை
அந்த ட்விட் பதிவிலேயே , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜியை டேக் செய்துள்ள குஷ்பு, எனக்கே இது போன்று நடக்கிறது என்றால், மற்ற பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள் என்று கூறியுள்ளார். எனக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் எதனால் அப்படி மிரட்டி இருக்கிறார் என்றால், நான் ஒரு முஸ்லிம் என்பதால் இப்படி மிரட்டி இருக்கிறார்.

குஷ்புவுக்கு மிரட்டல்
அந்த ட்விட்டில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ள குஷ்பு, இதுதான் ராமர் பூமியா என்று கேள்வி எழுப்பி உள்ளார். குஷ்பு அடிக்கடி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ட்விட் போட்டு வருகிறார். இதை அவரது எதிர் தரப்பினர் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படித்தான் இப்போது குஷ்வுக்கு எதிராக மிரட்டல் வந்துள்ளது. அதற்கு குஷ்பு உடனுக்கு உடன் பதிலடியும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் பலாத்கார மிரட்டல் வந்துள்ளது.

குஷ்பு விளக்கம்
இந்நிலையில் குஷ்பு பலாத்கார புகார் குறித்து இப்படி பப்ளிக்காக போஸ்ட் செய்தது ஏன் என்று ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு, நான் இதையெல்லாம் பப்ளிக்காக போஸ்ட் பண்றேன் என்று கேட்கிறீர்களே இதனால் என்ன அர்த்தத்தை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிரட்டல் விடுத்தநபருக்கு ஒரு குடும்பம் இருக்கும். எனவே அந்த நபர் பொதுவெளியில் அசிங்கப்பட வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications