யார் நடிக்கிறார்கள் என எனக்கு தெரியும்! மதிமுக பொதுக்குழுவில் வெடித்த பிரச்சனை! டென்ஷன் ஆன துரை வைகோ
சென்னை: மதிமுகவின் 29வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ சற்று டென்ஷன் ஆகியிருக்கிறார்.
சென்னை அண்ணா நகரில் உள்ல விஜயஸ்ரீ மஹாலில் மதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.தமிழகம் முழுவதும் இருந்தும் 1,500 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் அவர்களுக்கு மதிய உணவாக சாம்பார், ரசம், கூட்டு, பொரியலுடன் சைவ விருந்து கொடுக்கப்பட்டது.

இதனிடையே யார் யார் நடிப்பது, கூட இருந்துக்கொண்டே தன்னை பழிப்பது என்றெல்லாம் தனக்கு நன்றாகத் தெரியும் என அவர் பேச, மேடையில் அமர்ந்திருந்த மல்லை சத்யாவின் முகம் இறுகத் தொடங்கியிருக்கிறது. இதனை கவனித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது பேச்சின் போது மல்லை சத்யாவை ஹைலைட் செய்து அவர் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு புகழாரம் சூடியிருக்கிறார்.
மேலும் சில விவகாரங்கள் குறித்து துரை வைகோ மிக ஓபனாக மனதில் தோன்றியதை பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.பொதுக்குழுவுக்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முன்னாள் பொருளாளருமான கணேசமூர்த்தி வருவாரா மாட்டாரா என விவாதங்கள் ஓடிய நிலையில், முதல் வரிசையில் அமர்ந்து பொதுக்குழுவில் கலந்துகொண்டார்.
திமுக, அதிமுக பொதுக்குழுவாக இருந்திருந்தால் அசைவ விருந்து தூள் கிளப்பியிருக்கும். ஆனால் மதிமுகவின் பொருளாதார நிலை காரணமாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவாக சைவ விருந்தை மட்டுமே கொடுத்து அனுப்பி வைத்தார் வைகோ.

மதிமுகவை தொடங்கி 30ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தொடர்ந்து வைகோ தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications