கோவம் வரல.. சிரிப்புதான் வந்துச்சு.. இப்படியாவது கருப்புச் சட்டை போடுறாங்களே.. ஸ்டாலின் கிண்டல்!
சென்னை: "அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்த போது எனக்கு கோபம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை அணிகிறார்களே நினைத்தேன்" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதில் அளித்துப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "விடியல் எங்கே என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். விடியல் தரப்போகிறோம் என சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல. விடியலை பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்.

ரவுடிகளின் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றங்கள் பெருமளவு தடுக்கப்படுகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவில் பாதுகாப்பு மிக்க மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினை காதல் விவகாரம் பணம் கொடுக்கல் வாங்கல் நிலப்பிரச்சினை தனிப்பட்ட முன்விரோதம் வாய் தகராறு போன்ற காரணங்களுக்காக நடந்துள்ளது. அரசியல் காரணங்கள் சாதிய , மதக் கொலைகள் முலையிலேயே கிள்ளி, குறைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்த போது எனக்கு கோபம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை அணிகிறார்களே நினைத்தேன். பேரிடர் நிதியை கூட தராமல் உள்ள மத்திய அரசை கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தால் உங்களை நான் பாராட்டி இருப்பேன். ஆளுநரைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? இருட்டு அரசியல் செய்பவர்களுக்கு கருப்பு சட்டை அணிய தார்மீக உரிமை இல்லை." எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கடுமையாக எதிரொலித்தது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்ததுடன், யார் அந்த சார் என்றே பேட்சையும் அணிந்திருந்தனர். யார் அந்த சார் என்று கோஷமும் எழுப்பினர்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications