'நான் எனது தேசத்தை நேசிக்கிறேன், அரசை இல்லை!' சுதந்திர தினத்தன்று ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம் ட்வீட்
சென்னை: 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை ஒட்டுமொத்த தேசமும் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது.
நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் இன்று நினைவு கூரப்பட்டது. அதேபோல இந்த 76ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

டெல்லி செங்கோட்டை
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார். 9ஆவது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார். செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டை அரிக்கும் கரையானாக ஊழல் தான் உள்ளது. இந்த ஊழலை ஒழிக்கவில்லை என்றால் நம்மால் முழு வேகத்தோடு முன்னேற முடியாது.

பிரதமர் மோடி
ஊழல் நமக்கு ஒரு பெரிய சவால் என்றால் நெபோடிசம் நமக்கு மற்றொரு பெரிய சவால் வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை, முன்னுரிமை அளிப்பதே நெபோடிசம் ஆகும். சிபாரிசுகள் தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தீங்கு. இது திறமைசாலிகளின் வாய்ப்பை பறிக்கும். மேலும், ஊழலுக்கும் வழிவகுக்கும். குடும்ப நலனுக்கும் தேச நலனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தகுதியும் திறமையும் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தர வேண்டும். அப்போது தான் நமது தேசம் வளர்ச்சி அடையும்" என்று கூறி இருந்தார்.

பி.சி.ஸ்ரீராம்
இதற்கிடையே முன்னதாக பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைவரும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கேற்ப பலரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். அதேபோல சுதந்திர தினத்தையொட்டி இன்று பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

நாட்டை நேசிக்கிறேன்
பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எனது தேசத்தை நேசிக்கிறேன். ஆனால் அரசை அல்ல. ஜெய்ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. சுதந்திர தினத்தன்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படியொரு கருத்தைக் கூறியுள்ளது பெரிய விவாதத்தையே இணையத்தில் கிளப்பி உள்ளது. இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications