இதுக்கு ஏன் 2 வார பெட் ரெஸ்ட்? கேள்விப்பட்டதே இல்லையே! அண்ணாமலை சர்டிபிகேட்.. சுமந்த் ராமன் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாவட்ட தலைவர் அண்ணாமலையின் மருத்துவ சர்டிபிகேட் குறித்து டாக்டர் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக அதிமுக கூட்டணி மோதலுக்கு இடையில், அண்ணாமலையின் நடைபயணம் இன்னொரு பக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இடையில் 2 நாட்கள் தள்ளி வைக்கப்பட்ட கூட்டம் தற்போது 2 வாரம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பாஜக நிர்வாகிகள் இடையே இந்த நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதை பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர்.

I never heard of anything like this: Sumnath C Raman questions BJP chief Annamalai medical certificate

இது தொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில் , மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு சுவாச குழாய் தொற்று ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிக்கல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மீட்டிங்கிற்கும் வரவில்லை: இந்த நிலையில்தான் இன்றும் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை இல்லாமலையே தொடங்கியது, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுமந்த் சி ராமன்: பாஜக மாவட்ட தலைவர் அண்ணாமலையின் மருத்துவ சர்டிபிகேட் குறித்து டாக்டர் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மருத்துவமனை அறிக்கையில், சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வு போன்ற புகார்களுடன் 3 அக்டோபர் 2023 அன்று மாலை க்ளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டிக்கு அண்ணாமலை வந்தார். நுரையீரல் நிபுணரால் அவர் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டார் . பிற தொடர்புடைய விசாரணைகளுக்கு CT ஸ்கேன் செய்யப்பட்டது.

CT ஸ்கேன் இடது நுரையீரலின் அடித்தளப் பகுதியில் சளி முடிச்சுகள் இருப்பதை காட்டியது. இது மூச்சுக்குழாய் அழற்சியுடன் கூடிய வைரஸ் சுவாசக் குழாய் தொற்று ஆகும். அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு, அவரின் உடல்நிலை சீரான பிறகு வீட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

I never heard of anything like this: Sumnath C Raman questions BJP chief Annamalai medical certificate

அவருக்கு 5 நாட்களுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, 5 நாட்கள் முடிவில் ஆய்வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் குணமடைய இரண்டு வாரங்களுக்கு படுக்கை ஓய்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, என்று அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சுமந்த் சி ராமன் எழுப்பிய கேள்வியில், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன், ஆனால் ஒரு மருத்துவராக நான் இப்படி ஒரு சுவாசக்குழாய் தொற்றை கேள்வி பட்டதே இல்லை. இது போன தொற்றுக்கு குறைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்படாமல் 2 வாரங்கள் படுக்கை ஓய்வு பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

இந்த மருத்துவச் சான்றிதழ் யாத்திரையை ஒத்திவைப்பதற்கானது என்பது தெளிவாகிறது. இந்தச் சான்றிதழில் எந்த மருத்துவரும் தன் பெயரைப் போட விரும்பவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. அப்போதே இது பற்றி தெரிகிறது . மருத்துவத் துறை ஒரு கேலிக்கூத்தாக மாறி வருவது வருத்தமளிக்கிறது, என்று விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+