முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்தது என்ன ஆனது? அன்புமணி விளக்கத்தை பாருங்க!
தமிழக ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வைத்த புகார் உண்மைதான் என்று பாமக எம்.பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வைத்த புகார் உண்மைதான், அந்த நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என்று பாமக எம்.பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பாமக எம்.பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக - பாமக கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்தார்.
அதேபோல் அதிமுக தலைவர்கள் மீது பாமக தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்தது குறித்தும் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.

ஏன் போராட்டம்
அன்புமணி தனது பேட்டியில், இவ்வளவு நாள் அதிமுக, பாஜகவிற்கு எதிராக போராடினோம். இனி வரும் நாட்கள் நாங்கள் உள்ளிருந்து போராடுவோம். கூட்டணியில் இருந்து நாங்கள் மக்களுக்கு நன்மை செய்வோம். இது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மட்டுமே. சட்டமன்ற தேர்தல் வரும் போது முடிவுகள் எடுக்கப்படும்.

புகார்
முதல்வரை நாங்கள் விமர்சனம் செய்தது உண்மைதான். நான் மறுக்கவில்லை. கடுமையாக அதிமுகவை விமர்சனம் செய்தோம். விமர்சனம் செய்தவர்கள் சேர கூடாது என்றால் யாரும் கூட்டணி வைக்க முடியாது. இந்தியா முழுக்க விமர்சனம் செய்தவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.

எல்லோரும் அப்படித்தான்
இந்திராவை திமுக விமர்சனம் செய்யவில்லையா?. காங்கிரசை திமுக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறது. இப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லையா?. எல்லா கட்சிகளும் இப்படித்தான். நாங்கள் மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு இருக்கிறோம்.

குற்றச்சாட்டு வைத்தோம்
ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்தோம். இப்போதும் எங்கள் நிலைப்பாடு அது மட்டுமே. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. பாமக இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications