"ரிஸ்க்".. ஜெயலலிதா விஷயத்துல..அவரை ஏன் இழுக்குறீங்க? ராதாகிருஷ்ணனுக்காக வரிந்து கட்டி வந்த அண்ணாமலை
சென்னை: ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கையில் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை கடந்த செவ்வாய்கிழமை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு குறித்தும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் வைத்து உள்ளது.
மேலும் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அண்ணாமலை
இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்து உள்ளார். அண்ணாமலை அளித்த பேட்டியில், இந்த அறிக்கையில் 2 - 3 விஷயங்களை உன்னிப்பாக பார்க்க வேண்டும். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் என்ன சொல்லி இருக்கிறார். ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்லலாம். ஆனால் இந்தியாவிலும் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். சிறப்பான மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு போய் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

அதிகாரிகள்
அரசு அதிகாரிகள் சொல்லும் வார்த்தைகளை கூட ட்விஸ்ட் செய்து பார்ப்பது தவறு. அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் ஒவ்வொரு முடிவையும் விமர்சனம் செய்ய முடியாது. இக்கட்டான நேரத்தில், தலைபோகிற நேரத்தில் அரசு அதிகாரிங்கள் ரிஸ்க் எடுத்துதான் வேலை செய்ய முடியும். கடினமான முடிவுகளைத்தான் எடுக்க முடியும். ஆனால் அரசியல் பார்வையில் இதை பார்க்க கூடாது.

ட்விஸ்ட்
இதை எல்லாம் அரசியலாக்கினால் அதிகாரிகள் வேலை செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே எய்ம்ஸ் குழு திருப்தி இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் இந்த அறிக்கையில் அதை மறுக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஆதாரம் எதுவும் இல்லை. பொத்தாம் பொதுவாக அவர்கள் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகாரிகளை இதில் இழுக்காதீர்கள்.

ஐஏஎஸ்
ஐஏஎஸ் அதிகாரிகளை இதில் உள்ளே இழுப்பது சரியான விஷயம் அல்ல. அவர்களை அரசியலில் உட்படுத்தாதீர்கள். நம்ம சண்டையில் அவர்களை உள்ளே கொண்டு வராதீர்கள். அந்த வேலைக்கு உள்ளே நாம் செல்ல வேண்டாம். இந்த அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தில் எதுவும் அறிவியல்பூர்வமாக இல்லை.எய்ம்ஸ் சிகிச்சை முறை சரிதான் என்று சொல்லும் போது, எப்போது அதை ஆறுமுகசாமி நிராகரிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது, என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications