ஆன்லைன் ரம்மி: அரசு தடை சட்டம் இயற்றி இருந்தால் நான் நடித்திருக்கவே மாட்டேன்.. சரத்குமார் ஒரே போடு
சென்னை: ‛‛ஆன்லைன் ரம்மியை அரசு தான் தடை செய்ய வேண்டும். தடை செய்ய அரசு சட்டம் கொண்டு வந்திருந்தால் நான் நடித்திருக்கவே மாட்டேன்'' என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் காட்டமாக கூறினார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த உண்ணாவிரதத்துக்கு மத்தியில் சரத்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் ஆன்லைன் விளம்பரத்தில் நடித்தது பற்றி அவர் பல்வேறு விஷயங்களை கூறினார். இதுபற்றி நடிகர் சரத்குமார் கூறியதாவது:

கவலைப்படப்போவது இல்லை
ஆன்லைன் ரம்மி மட்டுமின்றி இணையதளத்தில் பல்வேறு வகையான விளையாட்டுகள் உள்ளன. சரத்குமார் என்பவர் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததால் அதுபற்றிய கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டு வருகிறது. இதனால் நான் கவலைப்படபோவது இல்லை. ஆபாச வெப்சைட்டுகள் நிறைய உள்ளன. துபாயில் 3 முறை ஆபாச இணையதளம் சென்றால் ஐபி முகவரியை கண்டுபிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் இந்தியாவில் தற்போது வரை நடவடிக்கை இல்லை. ஆபாச வெப்சைட்டுகளை நாம் தடை செய்துள்ளோமா?.

தோனி, ஷாருக்கான் வருகின்றனர்
அதேபோல் உலகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். கிரிக்கெட் தொடர்பான ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் தோனி, ஷாருக்கான் வருகின்றனர். குடிப்பழக்கம் குடியை கெடுக்கிறது. புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கானது என்பது போன்ற எச்சரிக்கை வாசகங்கள் போல் ரம்மியை பார்த்து விளையாடுங்கள் என கூறப்பட்டுள்ளது.

அரசு தான் சட்டம் போட வேண்டும்
இதனால் ஆன்லைன் ரம்மியை தடுக்க அரசு தான் சட்டம் போட வேண்டும். இதை செய்தால் தனிநபரான சரத்குமாரை நடிக்க வேண்டாம் என சொல்ல தேவையில்லை. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்திருந்தால் விளம்பரத்தில் நான் நடித்திருக்க மாட்டேன். சொல்லப்போனால் ரம்மி அறிவுப்பூர்வமானது. தற்போதைய சூழலில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாக உள்ளது. உலககோப்பை போட்டியே சூதாட்டமாக உள்ளது.

பொருளாதாரத்தில் முன்னேற..
நாமக்கல்லில் ஒருவர் தற்கொலை செய்ததாக கூறினார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆள்அனுப்பி கேட்டால் அவர் குடும்ப பிரச்சனை, கடனில் தற்கொலை செய்ததாக கூறினார்கள். இந்த கடன் எதற்காக வாங்கினார் என்பது தெரியவில்லை. பொருளாதார அடிப்படையில் அனைவரும் முன்னேற வேண்டும் என்று பலரும் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வருகின்றனர். '' என்றார்.

கிடப்பில் சட்ட மசோதா
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டத்துக்கு எதிராக திமுக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. மேலும் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டத்துக்கு தடை செய்ய தமிழக சட்டம் இயற்ற சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போதும் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமாருக்கு எதிராக ஒரு தரப்பினர் திரண்டனர். இந்நிலையில் தான் நடிகர் சரத் குமார் பேட்டியளித்துள்ளார்.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications