ஊழல் குறித்து மோடி பேசலாமா? பாஜகவினர்தான் முதலில் சிறைக்கு.. லிஸ்ட் போட்டு மனோ தங்கராஜ் அட்டாக்
சென்னை: ஊழல் குறித்து மோடியும், அமித்ஷாவும் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது!
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டுமெனில் முதலில் செல்ல வேண்டியவர்கள் பாஜகவினர் தான் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

பாஜக மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர், தவறு செய்பவர்களுக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று கூறி வரும் நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தல் தேதி குறிக்கப்பட்டு விட்டது.. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கிவிட்டன. இதனால், அரசியலில் கருத்து மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறது. இதற்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு , விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இதற்கு பாஜக மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர், தவறு செய்பவர்களுக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் ஊழல் செய்தவர்களுக்கு எதிரான தாக்குதல் வலுவாக இருக்கும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார். மனோ தங்கராஜ் கூறியிருப்பதாவது:
ஊழல் குறித்து மோடியும், அமித்ஷாவும் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது!
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டுமெனில் முதலில் செல்ல வேண்டியவர்கள் பாஜகவினர் தான்.
அஜித் பவார் பாஜகவில்!
முகுல்ராய் பாஜகவில்!
சுவேந்து அதிகாரி பாஜகவில்!
நாராயணன் ரானே பாஜகவில்!
மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில்!
சகன் புஜ்பல் பாஜகவில்!
விஜய்சாய் ரெட்டி பாஜகவில்!
ஹிமாந்தா பிஸ்வா சர்மா பாஜகவில்!
பிரேம்காந்த் பாஜகவில்!
சாகான் புஜ்பால் பாஜகவில்!!
இவர்கள் அனைவரும் சுதந்திர போராட்ட தியாகிகள் அல்ல! ஊழல் செய்து #BJPWashingMachine மூலம் சலவை செய்யப்பட்டவர்கள். தற்போது பாஜகவில் முக்கிய அமைச்சர்களாகவும், தலைவர்களாகவும் பதவியில் இருக்கின்றனர். இப்படியிருக்க ஊழலுக்கு எதிராக மோடியும், அமித்ஷாவும் எப்படியெல்லாம் கதை விடுகிறார்கள் பாருங்கள்! தேர்தல் பத்திர ஊழலுக்கென சட்டம் இயற்றி 8,250 கோடியை கொள்ளையடித்து பாஜக தான் என்பது உலகறிந்த உண்மை!.. இவ்வாறு மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications