அரசு அலுவலகங்களில் இன்று வேலை நிறுத்தம்.. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால், அவர்களது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கூறப்படுகிறது. இதனால் நாளை அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது கட்டாயம்; வராதவர்களுக்கு 'நோ வொர்க் - நோ பே' விதி அமல்படுத்தப்படும்.
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரியான சம்மேளங்கள், ஐக்கிய விவசாய முன்னணி அமைப்புகள் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.இப்போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்சாரம், போக்குவரத்து, காப்பீடு, சுகாதாரம், வங்கி உள்ளிட்டவைகளின் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

திமுக ஆதரவு
தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கொண்டு வந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக வங்கி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
வங்கிகள் வேலை நிறுத்தம்
இது தவிர, வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை மற்றும் பணிச் சுமையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.
விடுமுறை இல்லை
வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களில் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் நேரடி வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். எனினும், ரிசர்வ் வங்கி அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்காததால், வங்கி கிளைகள் சட்டப்படி திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தேவை மற்றும் முக்கிய பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
அரசு ஊழியர்கள் ஆதரவு
இதனிடையே அரசு ஊழியர்களும் இன்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் குருநாதன் வெளியிட்ட அறிக்கையில், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அணுசக்தி உற்பத்தியில் நுழைய அனுமதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
இன்று வேலை நிறுத்தம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கக்கூடாது. இதை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும் 60 மத்திய மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள் இணைந்து இன்றை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைநிறுத்தத்தை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது.
சம்பளம் இல்லை
"அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால், அவர்களது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கூறப்படுகிறது. இதனால் நாளை அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது கட்டாயம்; வராதவர்களுக்கு 'நோ வொர்க் - நோ பே' விதி அமல்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இதுகுறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications