சபாஷ்.. லாரி டிரைவர்கள் இந்த மாதிரி இருந்தா விபத்தே நடக்காது.. வீடியோவை பாருங்க
சென்னை: லாரி ஓட்டுநர்கள் பலர் வாகனங்களில் செல்லும் போது முந்த முயல்வோரை சரியான நேரத்தில் இப்படி எச்சரித்தால் பல விபத்துக்கள் நடைபெறாது. அந்த ஓட்டுநரின் செயலை வீடியோவில் பாருங்கள்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் லாரிகளை முந்த முயல்வது அடிக்கடி நடக்கும். வளைவுகளில் முந்தக்கூடாது என்றாலும், வளைவுகளில் முந்துவதையே பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதிவேகமாக சென்று முந்த முயலும் போது, எதிரே வரும் வண்டியை கவனிக்காமல், பிரேக்கும் போட முடியாமல் விபத்தில் சிக்குவது நடக்கிறது.

மற்ற ஊர்களில் லாரி என்றால், சென்னையில் தண்ணீர் லாரி, டிப்பர் லாரிகளுடன் பேருந்துகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு எளிதில் 3 பேரும் வழி தர மாட்டார்கள். லாரிகளை கூட முந்திவிட முடியும். பேருந்துகளை முந்துவது சென்னையில் மிக கடினம். இதனால் வாகன ஓட்டிகள் விபரீதமான முறையில் முந்துவார்கள். வலதுபக்கம் தான் வாகனத்தை முந்தி செல்ல வேண்டும். ஆனால் இடதுபக்கம் ஏறி சென்று முந்துவார்கள். சென்னையில் இப்படித்தான் பல நேரங்களில் நடந்து வருகிறது.
சென்னையில் மற்ற ஊர்களை போல் சிறிய சாலைகளாக இருக்காது. முந்தி செல்லும் போது எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதைவிட, முந்தும் முயற்சியில் வாகனம் திடீரென வ்லுக்கிவிட்டு டயரில் சிக்கி கொள்வது நடக்கிறது. அப்படி விபத்தில் சிக்கினால் நொடியில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அல்லது பின்பக்கமாக வந்து வேகமாக மோதுவால் விபத்துக்கள் ஏற்படுகிறது.சென்னையில் விபத்து ஏற்பட அதிக வேகம் மட்டுமே முக்கிய காரணமாக இருக்கிறது.

மற்ற ஊர்களில் வேகத்தை தாண்டி, கவனக்குறைவு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதி வேகத்தில் சென்று வாகனத்தை முந்த முயலும் போது கிராசிங் இருக்கும். அப்போது அந்த வாகனத்தை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். கடைசியில் விபத்தில் முடியும். குறிப்பாக லாரி மற்றும் பேருந்துகளை முந்தும் போது தான் இப்படி விபத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லாரி ஓட்டுநர்கள் பலர் வாகனங்களில் செல்லும் போது முந்த முயல்வோரை சரியான நேரத்தில் இப்படி எச்சரித்தால் பல விபத்துக்கள் நடைபெறாது. அது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பாருங்கள். அதில் இருசக்கர வாகன ஓட்டி லாரியை முந்த முயல்வார்.
லாரி டிரைவர் முந்த முயற்சிக்காதே என்று கையை காட்டியது சிறப்பு♥️♥️♥️♥️♥️ pic.twitter.com/jPJafLP2wc
— SHAAN SUNDAR 🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) August 2, 2023
அப்போது சைகை காட்டி வாகனம் வருவதை லாரி டிரைவர் இருசக்கர வாகன ஓட்டியை எச்சரிப்பார். இதனால் காரில் விபத்தில் சிக்க வேண்டியவர் தப்பித்துவிடுவார். இதுபோல் எச்சரிக்கை செய்தால், கவனக்குறைவாவே வேகமாக சென்று விபத்தில் சிக்குவது தவிர்க்கப்படும் என்று பலர் டிரைவரை பாராட்டி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications