பன்னீர்செல்வம் யோசிக்கணும்.. ஓபிஎஸ் திமுக கிட்ட போனால் இதுதான் நடக்கும்! தவெக கிட்ட உள்ளதும் போயிருமோ?
சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் போன்ற தலைவர்களை அதிமுகவில் இணைக்க முதன்முதலில் கோரிக்கை வைத்தது ஓபிஎஸ்தான்.. இப்போது ஓபிஎஸ்ஸையே, அதே அதிமுக உள்ள கூட்டணியில் இணையும்படி தினகரன் அழைப்பு விடுத்திருப்பது, கவனம் பெற்று வருகிறது.. இதையடுத்து ஓபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன? யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? யாருடன் கூட்டணி வைத்தால் பலன் கிடைக்கும்.. நாமே ஒரு குட்டி கால்குலேஷனை போட்டு பார்ப்போம்...!!
தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியில் இருந்து ஓபிஎஸ்சுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

ஓபிஎஸ் அரசியல்
கடந்த 25 வருடங்களில் அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணம். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தாமல் இருந்திருந்தால் சசிகலா பதவியேற்க முடியாத நிலை ஏற்படும்போது மீண்டும் 2024ல் முதல்வராகியிருப்பார்" என்று கூறியிருக்கிறார்.. தினகரனின் இந்த அழைப்பு அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது..
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் நம்பிக்கையாளர், மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர்.. அரசியல் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர்..
ஆனால் இப்போது அவரது ஆதரவாளர்களின் சிலர், வேறு வேறு பாதைகளில் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.. வைத்திலிங்கம் திமுகவில், மனோஜ் பாண்டியன் திமுகவில், ஜேசிடி பிரபாகர் தவெகவில், தர்மர் எம்பி அதிமுகவில் சேர்ந்ததால், ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதனால், ஓபிஎஸ் எங்கே இணைய போகிறார்? செங்கோட்டையன் அழைப்பை ஏற்று தவெகவுடன் கூட்டணி அமைப்பாரா? தினகரன் அழைப்பை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? திமுகவுடன் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது..
தேசிய ஜனநாயக கூட்டணி
ஒருவேளை ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால் என்ன நடக்கும்? அவருக்கு அங்கு சாதகமான சூழல் ஏற்படுமா தெரியவில்லை..
மத்திய அரசுடன் நேரடி தொடர்பு ஏற்படுவதால், வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அரசியல் ஆதரவு போன்ற விஷயங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான சூழல் உருவாகலாம்.. ஆனால், பெரிய கூட்டணியில் இணைவதால், ஓபிஎஸ் அணியின் தனித்த அரசியல் அடையாளம், முடிவெடுக்கும் சுதந்திரம் போன்றவை குறையவும் வாய்ப்பிருக்கலாம்..
முக்கியமாக, என்டிஏ கூட்டணியில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருப்பதால், ஓபிஎஸ் தரப்புக்கான முக்கியத்துவம் சற்று குறையலாம்.. கூட்டணிக்குள் முடிவெடுக்கும் அதிகாரமும் குறைவாகவே கிடைக்கும்.. என்டிஏ கூட்டணி என்பது ஓபிஎஸ்ஸுக்கு தற்போதைய அரசியல் பாதுகாப்பை தரலாம்.. ஆனால் நீண்ட காலத்துக்கு???
எனவே, என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்தால் பிளஸ்ஸும் உள்ளது, சவால்களும் இருப்பதாகவே தெரிகிறது...
திமுகவில் ஓ பன்னீர்செல்வம்
ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி திமுகவில் இணைந்தால், தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்...
ஆளும் கட்சியுடன் நேரடி இணைவு ஏற்பட்டால், ஓபிஎஸ் தரப்புக்கு நிர்வாக ரீதியான பாதுகாப்பும் அரசியல் நிலைத்தன்மையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி, அரசியல் அங்கீகாரம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.. ஆனால் இவ்வளவு காலம் திமுகவை எதிர்த்துவிட்டு, திடீரென அதே கட்சியில் சேர்வது அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தலாம்..
மேலும், திமுகவின் உள் அரசியலில் அவருக்கு எந்த அளவு முக்கியத்துவம் வழங்கப்படும் என்பது பற்றியும் கேள்விகள் எழுகின்றன.
தவெகவில் ஓபிஎஸ்
ஒருவேளை தவெகவில் ஓபிஎஸ் இணைந்தால், தமிழக அரசியலில் புதிய பரிமாணம் உருவாகலாம்.. வளர்ந்து வரும் கட்சியுடன் இணைவதன் மூலம், ஓபிஎஸ் அணிக்கு முக்கியத்துவம், முடிவெடுக்கும் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது... புதிய தலைமுறை வாக்காளர்களை சென்றடையும் வாய்ப்பும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும்.. இதனால் அரசியல் சக்தியாக தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளவும் முடியும்..
ஆனால் அதேசமயம், தவெகவே இன்னும் முழுமையான அரசியல் வேரூன்றாத நிலையில், ஓபிஎஸ் அணிக்கு நீண்டகால அரசியல் பாதுகாப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் வருகிறது.. தேசிய அளவில் செல்ல முடியாது..
புதிய கட்சியில் சேர்வதால் அவரது பாரம்பரிய ஆதரவாளர்கள் என்ன நினைப்பார்கள்? எப்படி எதிர்வினை காட்டுவார்கள்? என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.. அரசியல் நிச்சயமின்மை குறித்தும் யோசித்து பார்க்க வேண்டி உள்ளது..
சின்னம் சிக்கல்
இப்படி எந்த கட்சிக்கு சென்றாலும் பிளஸ் பாயிண்ட்களும் உள்ளது, சவாலான விஷயங்களும் உள்ளன.. இதில் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்று தெரியவில்லை.. ஓபிஎஸ் கேட்கும் சீட், எதிர்பார்க்கும் மேலிட பதவிகளை யார் தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை..
அப்படியே சீட் கிடைத்தாலும், ஓபிஎஸ் அணிக்கான சின்னம் எப்படியிருக்கும் தெரியவில்லை.. கடந்த முறை தேர்தலின்போதே, கடைசி நேரத்தில்தான் பலா பழம் சின்னத்தை தந்திருந்தார்கள்.. எனவே இப்போது சின்னம் மிக முக்கியமான விஷயமாக உள்ளது.
ஆனால் யாருடன் கூட்டணி வைத்தாலும், தன்னுடைய தனித்த அடையாளத்தை விட்டுவிடாமல், அதேசமயம், நீண்ட கால அரசியலையும் கவனத்தில் கொண்டே, ஓபிஎஸ் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?











Click it and Unblock the Notifications