"தொலைச்சிருவோம்".. கடைகளில் இனி கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால்? தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அதிரடி
சென்னை: கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட 2,891 கடைகளில் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அபராதம்: இதில் மொத்தமாக 775 கடைகளில் விதிமீறல்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.. அத்துடன், புகாருக்கு உள்ளான அந்த கடைகள் தலா ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் பேட்டி தந்தனர்.. அப்போது அவர்கள் சொல்லும்போது, "எடை குறைவாக விநியோகம் செய்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்கள் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை தொடரப்படும்" என்று எச்சரித்தனர்.
எடை அளவு: இதற்கு பிறகு, எடை அளவைகள் சட்டத்தின் கீழ் மீன், இறைச்சி கடைகளில் எடை குறைவாக விற்பது குறித்து சிறப்பு ஆய்வு நடந்தது... இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "பொது மக்களுக்கு இது குறித்து புகார் இருந்தால் புகார் அளிக்கலாம். தமிழ்நாடு சட்ட அளவியல் துறையானது மொபைல் அடிப்படையிலான மற்றும் இணைய அடிப்படையிலான புகார் கண்காணிப்பு அமைப்பு (TN - LMCTS) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் கடையின் போட்டோ அல்லது வீடியோ எடுத்து தங்கள் புகார்களை செயலி மூலம் பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் புகார் நிலையைக் கண்காணிக்கவும் இந்த ஆப் உதவுகிறது" என்றனர்.
வார்னிங்: வழக்கமாக, எடையளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது ஆகியன தண்டனைக்குரியதாகும். அதனால்தான், ஆய்வின்போது விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தபடியே உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications