பாம்புக்கும் பாம்புக்கும் சண்டை.. ராஜநாகம் - நாகப்பாம்பு மோதினால் எது ஜெயிக்கும்? தெரிஞ்சிக்கோங்க
சென்னை: பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், நெட்டிசன்கள் பாம்புகளை காமெடி கண்டென்ட்டுகளாக மாற்றிவிட்டனர். இந்நிலையில் பாம்புகளுக்குள் சண்டை வந்தால் ஜெயிக்கப்போவது ராஜநாகமா? அல்லது நாகப்பாம்பா? என்கிற விவாதம் சோஷியல் மீடியாவில் தீவிரமடைந்துள்ளது.
பாம்புகள்: பாம்புகள் குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்களாகும். உலகம் முழுவதும் மனிதர்கள் பரிணாமம் அடைவதற்கு முன்னரே பாம்புகள் தோன்றிவிட்டன. பாம்புகள் எல்லா காலநிலைக்கும், எல்லா இடத்திலும் வாழும் தன்மையை பெற்றிருப்பதால் விவசாய நிலங்கள் தொடங்கி வீடுகள் வரை இதனை மிக சாதாரணமாக பார்க்க முடிகிறது. இருப்பினும் பாம்பு குறித்த புரிதல்கள் மனிதர்களுக்கு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வகைகள்: இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் 70 சதவிகிதம் விஷமற்றவை, 30 சதவிகிதம்தான் விஷமானவை. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 4 வகை பாம்புகள்தான் விஷம் கொண்டவை. நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவைதான் விஷம் கொண்டவை. இந்த பாம்புகள் எல்லா நேரங்களிலும் விஷத்தை பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் Drybite எனப்படும் விஷமற்ற கடியைதான் கடிக்கின்றன. பாம்பு இயல்பாக வேகமாக நகரக்கூடியது. ஆனால் அதை தப்பிக்க விடாமல் செய்யும் போது அது விஷத்துடன் கடித்துவிடுகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
பாம்புகளின் WWE: மனிதர்கள்-பாம்புகள் மோதல் ஒருபக்கம் இருந்தாலும், பாம்புகள் vs பாம்புகள் மோதல் அடிக்கடி நடப்பதுண்டு. எதுவும் கிடைக்காத நேரத்தில் பாம்புகள் மற்ற பாம்புகளையே இறையாக உண்பதுண்டு. இப்படி ராஜநாகத்திற்கும், நாகபாம்புக்கும் சண்டை வைத்தால் எது ஜெயிக்கும் என்கிற விவாதங்கள் சோஷியல் மீடியாக்களில் பார்க்க முடிகிறது.
ராஜநாகம்: நாகப்பாம்புகள் இந்தியாவில் பரவலாக காணப்பட்டாலும், கருப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகளுடன் காணப்படும் ஒரு வகை நீளமான நாகப்பாம்புதான் ராஜநாகம் என பரவலாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு காரணம் இதன் கொடிய விஷமும், வேட்டையாடும் பண்பும்தான். இதன் விஷத்தால் ஒரே நேரத்தில் 20 பேரை கொல்ல முடியும். அதேபோல ராஜநாகம் துரோகத்திற்கு பெயர் பெற்றது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லையெனில் தங்கள் ஆட்களில் ஒருவரை (சக பாம்புகளை) சட்டென போட்டு தள்ளி லபக்கென முழுங்கிவிடும்.
இந்த பாம்புகளுக்கு பற்கள் 0.5 இன்ச் (8-10 மி.மீ) வரை இதன் பற்கள் இருக்கும். இது நாகப்பாம்பின் பற்களை விட பெரியது. எனவே ஒரே கடியில் சுமார் 600 மி.கி வரை விஷத்தை கக்கும். இந்த விஷம் மேலே சொன்னதை போல ஒரே நேரத்தில் 20 பேரை கொன்றுவிடும். அல்லது ஒரு வளர்ந்த யானையை கொல்ல போதுமானதாகும்.
நாகப்பாம்பு: இந்தியாவில் பரவலாக இந்த பாம்புகளை பார்க்க முடியும். இதை நல்ல பாம்பு என்றும் அழைப்பார்கள். பாறை இடுக்கு, சந்து, பொந்துகளில் வாழும் இந்த வகை பாம்புகளும் மிக மோசமான விஷத்தை கொண்டிருக்கின்றன. இதுவும் ராஜநாகத்தை போல சின்ன சின்ன பாம்புகளை தனது லஞ்ச் பட்டியலில் சேர்த்து வைத்திருக்கிறது. நாகத்தின் பற்கள் 6.78 மி.மீ என்கிற அளவில்தான் இருக்கும். எனவே இதன் கடி ராஜநாகத்தை விட கொஞ்சம் வீரியம் குறைவாக தான் இருக்கும்.
ராஜநாகம் vs நாகப்பாம்பு: ராஜநாகம் அளவில் பெரியது. 10-18 அடி நீளமும், 8-10 கிலோ வரை எடையும் இருக்கும். ஆனால் நாகப்பாம்பு அதிகபட்சமாக 7 அடி வரைதான் நீளம் இருக்கும். எடையும் அதிகபட்சமாக 7-9 கிலோதான் இருக்கும். மட்டுமல்லாது ராஜநாகம் மழை காடுகளைதான் விரும்பும். மனிதர்கள் வாடை ஆகாது. ஒரு மாதிரியான டைப். ஆனால் நாகம் வேற மாதிரி. இதற்கு புல்வெளி, வறண்ட காடுகள்தான் பிரியம். கொஞ்சம் ஜாலி டைப். மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இதை தாராளமாக பார்க்க முடியும்.
இப்படி இருக்கும்போது இரண்டு பாம்புகள் சந்தித்தால்.. வெளியூர் ஆட்டக்காரருக்கு உள்ளூரில் என்ன வேலை? என ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்ளும். இந்த சண்டையில் நிச்சயம் ராஜநாகம்தான் ஜெயிக்கும். ராஜநாகத்தின் ஆழமான ஒரு கடி நாகத்தின் நரம்பு மண்டலத்தை முற்றிலுமாக செயலிழக்கவைத்து கொன்றுவிடும். ஆனால் இந்த சண்டையில் நாகத்தின் கடி தன்மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறி பட்டால் ராஜநாகத்துக்கும் ஆபத்துதான்.
ஆனால் இப்படி சண்டை வருவது அபூர்வம்தான். எனவே இதை குறித்து யோசித்து மண்டையை குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications