கூட்டணியில் இருந்து போனால் போகட்டும்.. அவர்களின் விருப்பம்.. டெல்லி தான் முடிவு எடுக்கும்.. அண்ணாமலை
சென்னை: பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், கூட்டணியில் இருந்து போனால் போகட்டும் அது அவர்களது விருப்பம் என்றும் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்மையில் அதிமுக அறிவித்தது. அறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்த அண்ணாமலை விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என மிக காட்டமாக விமர்சித்து வந்த அதிமுக, பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டதற்கும் இதையே காரணமாக சொன்னது. அதிமுக உடன் மீண்டும் கூட்டணியை ஏற்படுத்த பாஜக தலைமை ஆர்வம் காட்டுவதாக சொல்லப்பட்டாலும் இதற்கு அதிமுக பிடி கொடுக்காமலேயே பேசி வருகிறது.

வரும் 2024 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி கிடையாது என அதிமுக அழுத்தி கூறியது. அதிமுக உடன் கூட்டணியை தொடர விரும்புவதாக விபி துரைசாமி கூறியதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டது தொண்டர்கள் எடுத்த முடிவு என உறுதியாக கூறினார். பாஜக கூட்டணியை விட்டு விலகியதில் உறுதியாக இருப்பதாக அதிமுக கூறி வரும் நிலையில், அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் யாரையும் சந்திக்கவில்லை. அங்கே வெறுமனே காக்க வைக்கப்பட்டார். அதன்பின் மறுநாள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதில்.. அதிமுக பாஜக கூட்டணி முறிவிற்கு என்ன காரணம்? அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் என்ன சாதகம்? பாஜக தலைமையில் எப்படி கூட்டணி அமைப்பது? பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால் என்னென்ன சாதகங்கள் ஏற்படும்? என்ற ரிப்போர்ட் ஒன்றை அண்ணாமலை அளித்துள்ளார்.
அதிமுக கூட்டணி முறிவு குறித்து டெல்லி தலைமையிடம் அறிக்கை அளித்த அண்ணாமலை, தமிழ்நாடு திரும்பியதும் உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது நடைபயணத்தை ஒத்திவைத்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றார். அண்ணாமலை பேசுகையில், தேர்தல் கூட்டணி குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக கட்சி தலைமை முடிவு செய்யும். கூட்டணி தொடர்பாக டெல்லி தலைமை முடிவு எடுக்கும். கூட்டணியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். தனித்து செயலாற்றுவதற்கு கட்சி நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும். கூட்டணியை விட்டு பிரிந்து சென்றவர்களை பற்றி யோசிக்க வேண்டாம். கூட்டணியை விட்டு பிரிந்து சென்றவர்கள் பற்றியோ, பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கியவர்களை பற்றியோ பேசுவதற்கான நேரம் இதுவல்ல. அதற்கான தேவையும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications