யுபிஐ பணம் அனுப்ப/பெற போகிறீர்களா? இதை மட்டும் தவறியும் பண்ணிடாதீங்க.. பறந்து வரும் ஆர்பிஐ வார்னிங்!
சென்னை: யுபிஐ மூலம் சிலருக்கு பணம் அனுப்பும் போது அல்லது பெறும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
யுபிஐ தற்போது இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது. எல்லோரும் யுபிஐ சேவையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்தியா முழுக்க யூபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. உலகில் அதிக அளவில் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

யுபிஐ பயன்பாடு:
அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில்தான் யுபிஐ மூலம் சிலருக்கு பணம் அனுப்பும் போது அல்லது பெறும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தவறான நபர்கள்:
அதன்படி யுபிஐ மூலம் தவறான நபர்களுக்கு நீங்கள் பணம் அனுப்பினால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும். சமீபத்தில் கேரளாவில் இப்படி பலருக்கு வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.
அதாவது நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்புகிறீர்கள். அவர் ஏற்கனவே ஏதாவது பொருளாதார ரீதியான தவறோ அல்லது தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்தாலோ, அவருடைய வங்கி கணக்கு முடக்கப்படும். அவருடன் பணம் அனுப்பி தொடர்பு கொண்ட நபர்களின் வங்கி கணக்கும் முடக்கப்படும்.
கேரளாவில் இப்படி கடை வைத்து இருக்கும் பலருக்கும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. அங்கே தவறு செய்துவிட்டு இவர்கள் கேரளா உள்ளிட்ட தென்னிந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இங்கே அவர்கள் தங்கள் தேவைக்கு யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர்.
எதிர்காலத்தில் இவர்களை கண்டுபிடிக்கும் போலீஸ்.. இவர்களுடன் வங்கி பரிவர்த்தனை கொண்டு இருந்த மற்றவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்குகிறது.
எனவே யுபிஐ மூலம் வங்கி கணக்கு முடங்காமல் இருக்க வேண்டும் என்றால் பணம் அனுப்பும் முன்பும், பெறும் முன்பும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்குகூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்களும் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு சிறிய அளவிலான சேவை வரிகளும் கூட விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைக்கு மேல் செய்கையில் வங்கியில் இருந்து அதற்கான பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில்தான் தற்போது வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2000ன் ரூபாய்க்கு மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும்.
ப்ரீபெய்டு முறையில்.. அதாவது வாலாட் முறையில் பணம் செலுத்தினாலோ, ப்ரீபெய்டு கார்ட் முறையில் பணம் செலுத்தினாலோ அதற்கான 0.5 சதவிகிதம் முதல் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மக்கள் சிலர் இப்போதே வாலட் மூலம் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த வாலட் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அதிகபட்சம் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications