Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் துடித்த பவதாரிணி! ஆயுர்வேத சிகிச்சையையே கைவிட நினைத்த கணவர்! உடனிருந்தவர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறப்பதற்கு முன்பு பவதாரிணி பட்ட வலியையும் வேதனையையும் பார்த்த அவருடைய கணவர் சபரி ஆயுர்வேத சிகிச்சை வேண்டாம் என முடிவு செய்ததாக இலங்கையில் அவர்களுக்கு உதவிய நபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பவதாரிணியின் உதவியாளர் சுரேன் லங்காஸ்ரீ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் இலங்கை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள சினிமா துறையில் பலருடன் தொடர்பில் இருந்தேன். அந்த வகையில் இலங்கையில் முன்னணி திரைப்பட நிறுவனமான ஐங்கரன் பிலிமி புரொடெக்ஷன்ஸுடனும் நான் நெருங்கிய நட்பில் இருக்கிறேன்.

Ilayaraja daughter Bhavatharinis husband thought to quit Ayurveda treatment

இந்த தொடர்பின் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபு என்னை தொடர்பு கொண்டார். பவதாரிணி தனக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள இலங்கை வந்துள்ளதாகவும் அவர் ஒரு மாத காலம் அங்கு தங்கியிருப்பார் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து பவதாரிணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு நாங்கள் சென்றோம்.

அங்கு பவதாரிணியின் கணவர் சபரி அறிமுகமானார். அப்போது ஒரு சிகிச்சைக்காக இங்கு வந்துள்ளதாகவே சபரி கூறியிருந்தார். என்ன சிகிச்சை, எந்த நோய் என எங்களிடம் அவர் சொல்லவில்லை, ஆனால் வெங்கட் பிரபு எங்களிடம் எந்த சிகிச்சை என்பது குறித்து தெரிவித்துவிட்டார். அவர்கள் சிகிச்சை எடுக்கும் இடத்திற்கு அருகே அபார்ட்மென்டை வாடகைக்கு பிடித்து தருமாறு என்னிடம் சபரி கேட்டுக் கொண்டார்.

அவர் கேட்ட இடத்தில் அபார்ட்மென்டை வாடகைக்கு பிடித்துக் கொடுத்தோம். இதையடுத்து அந்த வீட்டில் சிலவற்றை செட் ரைட் செய்து கொடுக்குமாறு சபரி என்னை அழைத்தார். இதன் பேரில் அந்த வீட்டிற்கு நான் சென்றேன். அப்போதுதான் பவதாரிணி காரை விட்டு இறங்குவதை பார்த்தேன். அவர் நல்ல உடல்நிலையில்தான் இருந்தார்.

அவராகவே நடந்துதான் லிப்ட் பகுதிக்கு வந்தார். அங்கு அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து முடித்த பிறகுதான் பவதாரிணிக்கு என்ன நடந்தது, அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்பதை சபரி எனக்கு கூறினார். யுவன் சங்கர் ராஜாவின் தொடர்பின்படிதான் ஒரு ஆயுர்வேத வைத்தியர் சபரி- பவதாரிணிக்கு அறிமுகமானார்.

அவருடைய ஆலோசனையின் பேரில்தான் இவர்கள் ஒரு மாதத்திற்கு சிகிச்சை எடுக்க வந்திருந்தனர். பவதாரிணியை அவரது கணவர் சபரி நன்றாக பார்த்துக் கொண்டார். அவரை ஒரு குழந்தையை பார்ப்பது போல்தான் சபரி பார்த்துக் கொண்டார். கடந்த ஜனவரி 16ஆம் தேதி இலங்கைக்கு வந்தார்கள். முதலில் ஆங்கிலம் தெரியாத சிங்கள மொழி பேசும் ஹோம் நர்ஸை வீட்டில் வைத்து பவதாரிணிக்கு வைத்தியம் பார்த்தனர்.

ஆனால் மொழி பிரச்சினையால் தமிழ் பேசும் நர்ஸ் தேவை என கேட்டனர். இதையடுத்து அந்த ஹோம் கேர் நிறுவனமும் ஸ்வேதா எனும் தமிழ் பேசும் நர்ஸை அனுப்பி வைத்தனர். அவர் பவதாரிணியை சகோதரி போல் பார்த்துக் கொண்டார். கடந்த 23 ஆம் தேதி இரவு பவதாரிணிக்கு உடல்நிலை மோசமடைந்தது.

காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து ஆயுர்வேத வைத்தியரை தொடர்பு கொண்டு லங்கா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆன்டிபயாடிக், வலி நிவாரணிகளை கொடுத்து அவரது வேதனையை மருத்துவர்கள் குறைத்தனர். அப்போதுதான் பவதாரிணியின் கணவர் ஒரு விஷயத்தை யோசித்தார்.

பவதாரிணிக்கு குணமாகும் என்றுதான் ஆயுர்வேத மருத்துவத்தை நாடினோம். ஆனால் அந்த மருத்துவம் எடுத்துக் கொண்ட பிறகும் பவதாரிணிக்கு உடல்நிலை மோசமடைந்ததால் ஆயுர்வேத சிகிச்சை வேண்டாம்,24 ஆம் தேதி காலையோ அல்லது மதியமோ சென்னைக்கே திரும்பி விடலாம் என சபரி முடிவு செய்திருந்தார். ஏனென்றால் 23 ஆம் தேதி பவதாரிணி பட்ட வேதனையை அவர் கூடவே இருந்து பார்த்ததால் அந்த முடிவை எடுத்தார். இவ்வாறு சுரேன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+