"ஸ்டாலின் வர்றார்".. இளையராஜாவுக்கு "போஸ்டிங்" தந்தது சரியே.. முத்தரசன் என்ன இப்படி சொல்லிட்டாரே..?
இளையராஜாவுக்கு எம்பி பதவி தந்தது சரி என்று பேட்டி தந்துள்ளார் இரா முத்தரசன்
சென்னை: இளையராஜாவுக்கு பதவி கொடுத்துவிட்டு பாஜக மதவெறி அரசியல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ள இரா.முத்தரசன், காளியை இழிவு செய்து விட்டார் என லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துபவர்கள், நபிகள் நாயகம் குறித்து விமர்சித்த நுபுர் சர்மாவை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட 8-வது மாநாடு உத்தமபாளையத்தில் நடந்தது.. இந்த மாவட்ட மாநாட்டில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு மாவட்டக் குழு மற்றும் மாநாட்டுக் குழுவினரைத் தேர்வு செய்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் முத்தரசன் பேசும்போது, தற்போது நடந்து வரும் அரசியல் பரபரப்புகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

காளி ஆவணப்படம்
அவர் சொன்னதாவது: "இந்த நாடு இப்போது ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.. நாட்டில் எப்படியாவது மதத்தின் அடிப்படையில் கலவரத்தை தூண்ட வேண்டும், மக்களை மதரீதியாக மோத விட வேண்டும் என ஆர்எஸ்எஸ் பாஜக திட்டமிடுகிறது.. அதன்மூலம் பாஜக ஆதாயம் தேட முயற்சிக்கிறது.. இந்து தெய்வம் காளியை ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை அவமதித்து விட்டார் என அவரை கைது செய்ய வேண்டும் என சொல்பவர்கள் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என ஏன் சொல்வதில்லை?

கால்நடை மேய்ச்சல்
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது.. ஆனால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது.. திரௌபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தி விட்டு, மறுபுறம் தேனி மாவட்டம் உட்பட மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றி, கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்து வருகிறது.. இதை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும்.. முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்பதை கேரளா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதனால், முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் உயர்த்த வேண்டும்.

ஸ்டாலின் வருகிறார்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எப்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தின் தமிழக மக்களின், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக குரல்கொடுக்கும்.. சமூக நல்லிகணக்கத்தை காக்கவும், மதச்சார்பின்மையை காக்கவும், அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கவும், 4 நாட்கள் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.. ஆகஸ்ட் மாதத்தில் இந்த மாநாடு நடக்க போகிறது.. இதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் நிச்சயம் நிறைவேற்ற போகிறோம்.

இளையராஜா
நியமன எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா, வீராங்கனை பிடி உஷா ஆகியோர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், உண்மையிலேயே எம்பி பதவி என்பது இளையராஜாவுக்கு பொருத்தமானதுதான். ஆனால் அம்பேத்கருடன் மோடியை அவர் ஒப்பிட்டதால்தான் அவர் விமர்சிக்கப்படுகிறார். அதே நேரத்தில் இளையராஜாவுக்கு பதவி கொடுத்துவிட்டு பாஜக மதவெறி அரசியல் செய்யக்கூடாது.
Recommended Video

சீதா நெருப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதால் ஆளும் கட்சியாக இருந்தபோதும், தற்போது எதிர்கட்சியாக இருக்கும்போதும் அதிமுகவினரால் சொந்த சிந்தனையில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதன் விளைவுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அதிமுக அமைச்சரின் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை வரவேற்கத்தக்கது... இதில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் ஏதும் இல்லை... குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அதிமுகவினர் நெருப்பில் குதித்து தன்னை நிரூபித்த சீதையை போல் தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும்" என்றார் முத்தரசன்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications