காரணமே வேற.. சிவகார்த்திகேயன் இமானுக்கு செய்த துரோகம் இதானா? முதல் மனைவியே வெளிப்படையாக சொன்ன தகவல்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி இமான் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதற்கு பலர் பல்வேறு காரணங்களை சொல்லி வரும் நிலையில், இமானின் முதல் மனைவி புதிய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு போட்டியில் மிமிக்ரி செய்யும் காமெடியனாக அறிமுகமாகி, தொகுப்பாளராக வளர்ந்து மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி உச்சத்தை தொட்டு இருக்கிறார். பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ள அவரது நடிப்பில் அடுத்து அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதற்கான புரோமோசன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்தான், நேற்று டி இமான் கொடுத்த பேட்டி இடிபோல் வந்து விழுந்து இருக்கிறது. சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால படங்கள் பெரும் வெற்றியை அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இமானின் இசைதான். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா என சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு இசையமைத்து பல்வேறு வெற்றிப்பாடல்களை கொடுத்து உள்ளார்.
மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பரிந்துரை செய்ததே இமான் தான். அனுபவமான இசையமைப்பாளராக இருந்து வந்த இமான், வளரும் இளம் நடிகராக சிவகார்த்திகேயன் இருந்தபோது பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களுக்கு இமான் இசையமைக்கவில்லை. பெரும்பாலும் அனிருத் இசையில்தான் அவரது படங்கள் வெளியாகின.
அடுத்து வரும் அயலான் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இமான் - சிவகார்த்திகேயனின் வெற்றிக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று யூடியூப் சேனலுக்கு இமான் கொடுத்த பேட்டி வெளியாகி தமிழ் திரையுலகையே அதிர்ச்சியடைய செய்து உள்ளது. சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றாதது ஏன் என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இமான், "சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் நான் இணைந்து பயணிப்பது கடினம். அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். மிகப்பெரிய துரோகத்தை அவர் எனக்கு செய்து இருக்கிறார். என்னால் அதை வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் என்னுடைய குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும். சிவகார்த்திகேயனே என்னுடைய வாழ்க்கையில் நடந்த துன்பங்களுக்கு முக்கிய காரணம். நெருக்கமாக பழகிய அவர் எனக்கு செய்த துரோகத்தை ஏற்க முடியவில்லை." என வேதனையுடன் கூறினார்.
டி இமான் தனது முதல் மனைவியை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து, அண்மையில் அமலி என்ற பெண்ணை 2 வது திருமணம் செய்து கொண்டார். இதையும் சிவகார்த்திகேயன் உடனான பிரச்சனையையும் தொடர்புபடுத்தி, இமான் சொன்ன துரோகம் என்ற வார்த்தைக்கு பலர் பல்வேறு விளக்கங்களை எழுதி வந்தனர். இந்த நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா, இது தொடர்பாக தனியார் இதழுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில், "சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர். டீசண்டான மனிதர். எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாது என்று அவர் சமாதானம் பேச வந்தார். நல்ல எண்ணத்தில் நாங்கள் ஒற்றுமையாக வாழ அவர் நினைத்து முயற்சி செய்தார். நண்பரின் குடும்பம் பிரியக் கூடாது என நினைத்தார். இமானின் விவாகரத்து முடிவை ஏற்காமல் நியாயத்தின் பக்கம் சிவகார்த்திகேயன் நின்றதை துரோகம் என்று இமான் சொன்னதாக நினைக்கிறேன்." என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications