டிசம்பர் முதல்.. செல்போனில் OTP லேட்டாக வரும்.. ரெடியாக இருங்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பை பயன்படுத்தும் பொதுகம்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
டிசம்பர் 1 முதல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வணிக செய்திகள் மற்றும் OTP (ஒன் டைம் பாஸ்வேர்ட்) செய்திகளை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் ஃபிஷிங் மோசடிகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படாலம்.

ஆம்.. டிசம்பர் 1 முதல் அனைத்து OTP களும் கண்காணிக்கப்படும். இதனால் OTP பெறுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். போலி OTP களை பயன்படுத்தி மோசடி செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை உதவும்.
ஒவ்வொரு மெசேஜும் எங்கேயிருந்து வருகிறது என்ற மூலத்தையும் கண்காணிப்பதன் மூலம் பயனர்களின் பாதுகாப்பு அதிகரிக்கும்.
மேலும், ஜனவரி 1 முதல் 5G உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை அமைப்பதற்கான செலவுகள் தரநிலைப்படுத்தப்படும். இதனால் 5G சேவைகள் விரைவில் கிடைக்கும்.
TRAI-யின் இந்த புதிய நடவடிக்கைகள் தொலைத்தொடர்பு துறையை பாதுகாப்பானதாகவும், நவீனமாகவும் மாற்றும். பயனர்கள் இனி மோசடிகளுக்கு அஞ்சாமல் தொலைபேசிகளை பயன்படுத்தலாம். மேலும் 5G சேவைகளும் விரைவில் கிடைக்கும்.
முக்கிய அம்சங்கள்:
* டிசம்பர் 1 முதல் OTP களில் கண்காணிப்பு கட்டாயம்.
* 5G உள்கட்டமைப்பு விரைவில் உருவாகும்.
* தொலைத்தொடர்பு துறை பாதுகாப்பானதாக மாறும்.
ஆரம்பத்தில் அக்டோபர் 1க்கு இந்த விதிமுறைகளை அமல்படுத்தும் காலக்கெடு, நிர்ணயிக்கப்பட்டாலும், இந்த வழிமுறைகளை பின்பற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான காலக்கெடு நவம்பர் 1 க்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, அது டிசம்பர் 1 க்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications