கவரப்பேட்டை ரயில் விபத்து.. சென்னை டூ கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 'கவாச்' காலத்தின் கட்டாயம்
சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல் - கூடூர் ஆகிய 3 வழித்தடங்களில் 271 கி.மீ. தொலைவுக்கு முதல் கட்டமாக, கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த கடந்த வாரம் டெண்டர் வெளியிட்டிருந்தது தெற்கு ரயில்வே.. இவை ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பம் ஆகும். கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்துள்ள நிலையில், இதை உடனே செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அண்மையில் ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு பின்னர் கவாச் தொழில்நுட்பம் குறித்தும், அதை செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள். இதனிடையே நேற்று இரவு சென்னை கும்மிடிப்பூண்டி பிரதான வழித்தடத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் சென்ற லூப் லைனில், மெயின் ரயிலுக்கு சிக்னல் மாறி வந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டது. அதாவது மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது. இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் இந்த விபத்தில் ஏற்படவில்லை. எனினும் சுமார் 19 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அடுத்தடுத்து நடக்கும் ரயில் விபத்துக்கள் காரணமாக நாட்டின் மிக முக்கிய அதிவேக ரயில் வழித்தடங்களில் 'கவாச்' தொழில்நுட்பத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து செயல்படுத்த தொடங்கிய உள்ளது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வரும் போது மற்றும் விபத்து அபாயம் ஏற்படும் சமயங்களில், விபத்தில் சிக்குவதை தடுக்க 'கவாச்' தொழில்நுட்பம் உதவும் என்று கூறப்படுகிறது.
கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன: ரயில் இன்ஜின், ரயில் பாதை, சிக்னல் என மூன்றையும் இணைத்து பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கவாச் தொழில்நுட்பம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு கவசம் ஆகும். 2022-ம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் இதனை அறிவித்தது. இது எப்படி வேலை செய்யும் என்றால், ரயில் பாதையின் நடுவில், ஒவ்வொரு 4 கி.மீ. தொலைவில் சிப்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இவை ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் '.
எஸ்பிஏடி சிக்னல் பாஸிங்அட் டேஞ்சர் என்று அழைக்கப்படும் இந்த சமிக்ஞையானது, ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால் உடனே எச்சரித்துவிடும். ஏதேனும் மனித தவறுகளால் அல்லது சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செல்ல நேர்ந்தால், டிரைவரை அலர்ட் செய்த விபத்தை தவிர்த்துவிடும். எப்படி என்றால், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தைக் குறைக்கும் . ஆனால் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலானது.. ஏனெனில் ஒரு கி.மீ. தொலைவுக்கு இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த ரூ.50 லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள். தற்போதைய நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக கவாச் தொழில்நுட்பத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
முதல் முதலாக தென் மத்திய ரயில்வேயின் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பிதார் பிரிவுகளில் 250 கிலோமீட்டர் தூரம் வரை கவாச் சோதனை நடத்தப்பட்டிருந்தது. இந்த சோதனை வெற்றிபெற்றதையடுத்து, இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதிலும் கவச் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கவாச் தொழில் நுட்பத்தை தெற்கு ரயில்வேயில் முதல்கட்டமாக 3 வழித்தடங்களில் 271 கி.மீ.தொலைவுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பின்னர் படிப்படியாக 2,216 கி.மீ. தொலைவுக்கு கவாச்தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மத்திய அரசு அறிவிப்பின் படி, சென்னை - அரக்கோணம் வரை 68 கி.மீ. தொலைவுக்கும், அரக்கோணம் - ரேணிகுண்டா வரை 65 கி.மீ. தொலைவுக்கும், சென்னை- கூடூர் வரை 138 கி.மீ. தொலைவுக்கும் கவாச் தொழில்நுட்பம் நிறுவப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல் - கூடூர் ஆகிய 3 வழித்தடங்களில், கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் படிப்படியாக பல பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிக ரயில் போக்குவரத்து உள்ள ஜோலார்பேட்டை - சேலம் - ஈரோடு, விழுப்புரம் - காட்பாடி, கரூர்- திண்டுக்கல், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, மதுரை - கன்னியாகுமரி, சொரனூர் - சேலம், ஈரோடு - கரூர் உள்ளிட்ட வழித்தடங்களில் 'கவாச்' தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications