ஹேப்பி நியூஸ் குட்டீஸ்! தமிழகத்தில் அக்டோபர் 12 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!
சென்னை: தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 12 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் அளவில் முதல் பருவ தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டுக்கான விடுமுறை விவரங்கள் காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு தகவல்கள் நாள்காட்டியை பள்ளிகள் திறக்கும் முன்னரே தமிழக அரசு வெளியிட்டது. இருப்பினும் சூழலுக்கு ஏற்ப அதில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

காலாண்டு தேர்வு
அந்த வகையில் காலாண்டு தேர்வு தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெறும் என்றும் இதற்கான கால அட்டவணை வினாத்தாள்கள் ஆகியவை முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தயாரித்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் எண்ணும் எழுத்தும் செயலி வழியாக தொகுத்தறிவு மதிப்பீடு நடத்தப்படும், மாணவர்களுக்கு காலாண்டு, ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகள் திறக்கப்படும்
ஆனால் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்கு ஏற்ப விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அக்டோபர் 9-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை என்றும் அக்டோபர் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications