நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.. எல்லோரும் பார்க்க வேண்டும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
சென்னை: நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை காண்பதற்கு வாய்ப்புள்ளோர் வருகை தர வேண்டும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடக்கவுள்ள இரும்பின் தொன்மை என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவிருக்கிறார். அதேபோல் மதுரையில் கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அமையவுள்ள அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் கீழடி இணையதளத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பொன்று நாளை வெளியாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை காண்பதற்கு வாய்ப்புள்ளோர் நேரில் வர வேண்டும் என்றும், மற்றவர்கள் நேரலையில் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொல்லியல் துறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்திற்கு இப்படியொரு பதிவை சோசியல் மீடியாவில் பதிவிட்டதில்லை. இதனால் மக்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications