கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.. நவம்பர் 30ம் தேதி தான் கடைசி நாள்
சென்னை: ஆதார் கேஒய்சி விவரங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் இணைப்பு முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேஒய்சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள அனைவரும் 3 வாரங்களுக்கு செய்ய வேண்டும்
நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பை பெற்று வருகிறார்கள். இதன்படி பிரதம மந்திரிர உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு 372 ரூபாயும், மற்றவர்களுக்கு 47 ரூபாயும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. அதேநேரம் பொதுத்துறை நிறுவனங்களால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கு 500 ரூபாய்க்கும் சிலிண்டர் வழங்கப்படுகிறது . அதேநேரம் இணையாத மற்றவர்களுக்கு 818.50 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்கள மற்றும் சாதாரணமாக சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைவரும் இன்னும் சில வாரங்களில் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேஒய்சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கேஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு இந்த அறிவிப்பினை பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. கடைசி நாள் தேதியை நீட்டித்தபடியே வருகின்றன.
அதன்படி கேஸ் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக கேஒய்சி பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் ஊரில் உங்களுக்குசமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகிக்கும் ஏஜென்சிக்கு சென்று ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்துவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சமையல் எரிவாயு இணைப்பு முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

ஏஜென்சிக்கு வர முடியாத மூத்த குடிமக்களுக்கு டெலிவரி ஊழியர்கள் வீட்டிற்கு சென்று செல்போன் செயலி மூலம் முகப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேஸ் ஏஜென்சிகள் அறிவித்திருந்தன. கடந்த மே 30ஆம்தேதிக்குள் ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் சமையல் எரிவாயு இணைப்பு ரத்தாகும் என செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் ஜூலை 27ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டது.. அதற்கு பிறகு தற்போது நவம்பர் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை இணைக்கவில்லை என்றால், சிலிண்டர் இணைப்பு நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை ஆதார் கேஓய்சி (கைரேகை பதிவு செய்யாதவர்கள்) பதிவு செய்யாதவர்களுக்கு பாரத் கேஸ் ஏஜென்சி சார்பில் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications