விஜயகாந்தை கருப்பு MGRனு சொல்லக் கூடாது! ஜெயலலிதா போட்ட முதல் கண்டிஷன்! உண்மையை உடைத்த பண்ருட்டி!
சென்னை: விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லக் கூடாது என்பது தான் அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையின் போது 2011ல் ஜெயலலிதா போட்ட முதல் கண்டிஷன் என பண்ருட்டி ராமச்சந்திரன் ஃபிளாஷ்பேக் பகிர்ந்துள்ளார்.
ஆனால் அதற்கு விஜயகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறிய பண்ருட்டி ராமச்சந்திரன், 2011 சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்த் தயக்கம் காட்டியதாகவும் நான் தான் அவரை சரிகட்டினேன் எனவும் கூறியிருக்கிறார்.

தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியது இவைதான்..: அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என ஜெயலலிதா விரும்பினார். எனவே இதற்கான முயற்சிகளை துக்ளக் சோ தான் முழுமையாக முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் விஜயகாந்த் பிடி கொடுக்கவில்லை. எனவே, இதற்கு மேல் என்னால் முடியாது என சோ சோர்ந்து போய்விட்டார். அப்போது நான் தான் விஜயகாந்தை சரிகட்டி அதிமுக கூட்டணியில் இணைய வைத்ததேன். அதனால் தான் அவர் அன்று எதிர்க்கட்சித் தலைவராக வர முடிந்தது எனவும் கூறியுள்ளார் பன்ருட்டி ராமச்சந்திரன்.
ஜெயலலிதாவை எதிர்க்க வேண்டாம் என விஜயகாந்திடம் தாம் எடுத்துக் கூறியதாகவும் ஆனால் அவர் தன் பேச்சை கேட்கவில்லை எனவும் இதனால் தான் தாம் தேமுதிகவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தேமுதிகவில் பண்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் விஜயகாந்த் முடிவுகளை திடீர் திடீரென்று மாற்றுவார் என்றும் இது தனக்கு சரிபட்டு வரவில்லை எனவும் கூறிய பண்ருட்டி ராமச்சந்திரன், பிரயோஜனம் இல்லாமல் உழைத்து என்ன பயன் என்பதால் அவரை விட்டு விலக நேர்ந்ததாக தெரிவித்தார். விஜயகாந்த் மறைவுக்கு திரண்ட கூட்டம் அவர் மீதான அனுதாபத்தால் திரண்ட கூட்டமே தவிர, அது தேமுதிகவின் அரசியல் எழுச்சிக்கு பயன்படாது எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக, தனிக்கட்சி, தேமுதிக, மீண்டும் அதிமுக, ஓ.பி.எஸ். அணி என அரசியலில் எல்லா பக்கமும் ரவுண்டு அடித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications