ஷாக்.. 3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை.. சென்னை போலீஸ் அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் மத்தியிலும் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் டிரக்ஸ் என்ற பெயரில் போலீசார் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

சென்னையில் கைது
இந்நிலையில் தான் சென்னை சோழவரத்தில் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி தெலங்கானா மாநிலம் ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அலுவலகத்தில் தீவிர விசாரணை
அதன்பிறகு அவரை போலீசார் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகின. அதாவது தெலங்கானாவை சேர்ந்த இவர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து போதைப்பொருள் கடத்தி விற்றது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே தெலங்கானாவில் போதைப்பொருள் கடத்தி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் 2வது வழக்கு பதிவாகி உள்ளது.

3வது மாடியில் இருந்து குதித்த கைதி
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தான் திடீரென்று அவர் சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஆவடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வரும் வழியில் இறப்பு
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதாவது மருத்துவமனை வரும் வழியிலேயே அவர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணைக்கு பயந்தும், தனது உண்மையான முகம் குடும்பத்தினருக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் அவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை கைதி இறந்ததால் சிபிசிஐடி விசாரணைக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த வழக்கும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications