சென்னை அரசு மருத்துவமனையில் வெறும் 500 ரூபாயில்... மாரடைப்பு வரப்போவதை கண்டுபிடிக்கும் வசதி
சென்னை : வெறும் 500 ரூபாய் செலுத்தினால், இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பரிசோதனை மூலம் ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துல்லியமாக அறிய முடியும்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு மருத்துவமனையை விடவும் உயர்ரகமான வசதிகள் உள்ளன. முழு உடல் பரிசோதனைகள் மிக குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது. இங்கு பலர் முழு உடல் பரிசோதனைக்காகவே வருகிறார்கள். அதேபோல் மிக உயர்ரக அறுவை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழக அரசின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக விளங்கும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக ஒரு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 500 ரூபாய் செலுத்தினால், இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை அறிய சி.டி. கால்சியம் ஸ்கோரிங் என்ற பரிசோதனை முறை முடியும்.
இந்த பரிசோதனை மூலம் ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பது துல்லியமாக தெரிவிக்கப்படும். இந்த பரிசோதனை மேற்கொள்ள அதிநவீன சிடி ஸ்கேன் பரிசோதனை கருவி உள்ளது. இதன் மூலம் ஊசிகளோ, மருந்துகளோ இல்லாமல் எளிய முறையில் 2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சி.டி. கால்சியம் ஸ்கோரிங் என்றால் என்ன
சி.டி. கால்சியம் ஸ்கோரிங் என்பது நவீன மருத்துவத்தில் உள்ள ஒரு அதிநவீன சி.டி. ஸ்கேன் பரிசோதனை முறை. இதன் மூலம், ஒருவரின் இதயத் தமனிகளில் படிந்துள்ள கால்சியத்தின் அளவைக் கண்டறிய முடியும். கால்சியம் படிவுகள் என்பது, எதிர்காலத்தில் இதய அடைப்புகள் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறிப்பது ஆகும். இந்தப் பரிசோதனையின் முடிவுகள் ஒரு மதிப்பெண்ணாக வழங்கப்பட்டு, மாரடைப்புக்கான ஆபத்து எந்த அளவில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கணிக்க உதவுகிறது. பரிசோதனை நேரம் வெறும் 2 நிமிடங்களில் முடிந்துவிடும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 500 ரூபாய் என்ற சலுகை விலையில் வழங்கப்படுகிறது.
இதனால் எளிய மக்களுக்கு என்ன நன்மை
மாரடைப்பை முன்கூட்டியே கணித்துத் தடுக்க முடியும். பொதுவாக மற்ற இரத்தப் பரிசோதனைகள் (கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவு) எதிர்கால ஆபத்தை மட்டுமே சொல்லும். ஆனால், சி.டி. கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனை, இதயத்தின் இரத்தக் குழாய்களில் எவ்வளவு சேதம் கால்சியம் படிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண் முன்னே காட்டிவிடும்.
பரிசோதனை முடிவில் ஆபத்து நிலையை அறிவது எப்படி
சி.டி. கால்சியம் ஸ்கோரிங் செய்த பின்னர் ரிசல்ட் மதிப்பெண் வடிவில் வழங்கப்படும். உங்கள் ஸ்கோர் 0-ஆக இருந்தால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு மாரடைப்பு வரும் ஆபத்து மிகக் குறைவு . ஸ்கோர் அதிகமாக இருந்தால், மருத்துவர் உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
மாரடைப்பு அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைத் திட்டத்தை உடனே தீர்மானிக்க முடியும். தேவையற்ற மருந்துகளைத் தவிர்க்க முடியும். மிதமான கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இந்த ஸ்கோர் 0 என்று வந்தால், அவர்களுக்கு உடனடியாக ஸ்டேட்டின் போன்ற மருந்துகளைத் தொடங்காமல், உணவு முறை மாற்றங்களை மட்டும் மாற்ற, மருத்துவர்கள் அறிவுரை கூற வாய்ப்பு உள்ளது.
தீவிர சிகிச்சை தேவை யாருக்கு
அதிக ஸ்கோர் உள்ளவர்களுக்கு உடனடியாக மருந்துகள், உணவு பழக்க வழக்க மாற்றங்கள் மற்றும் கூடுதல் பரிசோதனைகள் (உதாரணமாக, ஆஞ்சியோகிராம்) அவசியமா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்கள்
குறைந்த செலவு
ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த சி.டி. கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனை வெறும் 500 ரூபாயில் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ₹5,000 முதல் ₹15,000 வரை இந்த பரிசோதனைக்கு செலவாகும் . எனவே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயர் தரமான பரிசோதனையைச் செய்ய முடியும்.
அதேபோல் மிகக் குறுகிய காலத்தில் (2 நிமிடங்களில்) பரிசோதனை முடிந்துவிடுவதால், சிகிச்சை அளிக்கும் பணி வேகமாகத் தொடங்க முடியும்.
யாரெல்லாம் சி.டி. கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனையைச் செய்ய வேண்டும்
சி.டி. கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனையை பொறுத்தவரை பொதுவாக, மாரடைப்புக்கான அறிகுறிகள் இல்லாத, ஆனால் மிதமான அல்லது நடுத்தர ஆபத்தில் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். பொதுவாக 40 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள். உயர் இரத்த அழுத்தம்(பிபி) உள்ளவர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் அல்லது ட்ரைகிளிசரைடு அளவு உள்ளவர்கள் செய்ய வேண்டும்.
புகைபிடிப்பவர்கள் அல்லது புகைபிடிப்பதை நிறுத்தியவர்கள் மற்றும் குடும்பத்தில் மாரடைப்பு வரலாறு (சிறு வயதிலேயே பெற்றோருக்கு மாரடைப்பு) உள்ளவர்கள் மற்றும் அதிக உடல் எடை அல்லது போதிய உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் செய்ய வேண்டும்.
ஏற்கனவே மாரடைப்பு வந்தவர்கள் அல்லது இதயத்தில் ஸ்டென்ட் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே அடைப்புகள் இருக்கும். அதனால் செய்ய தேவையில்லை.. அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் கதிர்வீச்சு அபாயம் காரணமாக செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது குறித்த சந்தேகம் மற்றும் முழு தகவல்களை அறிய மருத்துவர்களை நாடுங்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications