மகளிர் உரிமை தொகை.. புதிதாக 5000 பேர் சேர்ப்பு.. 8883 பேர் நீக்கம்.. ஏன் தெரியுமா?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் புதிதாக 5000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 8883 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
தமிழக அரசு நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில்," முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27-ம்தேதி மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்தின்கீழ், 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூ. ஆயிரம் வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூ. 1065 கோடியே 21 லட்சத்து98 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் அளிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் வரவு வைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த அக்டோபர் மாதத்துக்கான உரிமைத்தொகை அக்.15ம் தேதி விடுமுறை நாள் என்பதால் ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகை அனுப்ப முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். உரிமைத்தொகை பெற்றுக் கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அக்டோபர் மாதத்துக்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 1064 கோடியே,84 லட்சத்து 6 ஆயிரம் உரிமைத்தொகைஅக்டோபர் 14-ம் தேதி அன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகையை பொறுத்தவரை புதிதாக விண்ணப்பம் செய்வதற்கு, பெண்களுக்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் புதிதாக ரேஷன் கார்டு பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கப்படவில்லை. புதிய ரேஷன் கார்டு வந்துவிட்டாலும், அரசின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். வீட்டில் யாரும் வருமான வரி கட்டியவர்களாக இருக்கக்கூடாது. வீட்டில் ஒருவரிடமும் நான்கு சக்கர வாகனங்கள் இருக்கக்கூடாது. அரசு ஊழியர்களாக இருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.இதில் முதல் இரண்டு நிபந்தனைகளை, அரசு குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதாரை வைத்து கண்டுபிடித்துவிடுகிறது. 3வத நிபந்தனைகளையும் ஆதாரை வைத்து வருமானத்தை கண்டுபிடித்துவிடுகிறது எனவே இதில்எந்த பிரச்சனையும் இல்லை என்றால், அவர்கள் அரசு அறிவிப்பு வெளியிடும் போது மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேநேரம் தகுதி அற்றவர்கள் மகளிர் உரிமை தொகை வாங்குவது தெரியவந்தால், அவர்களுக்கு உரிமை தொகை ரத்து செய்யப்படுவதும் நடக்கிறது. அப்படித்தான் சுமார் 8000 பேருக்கு மகளிர் உரிமை தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications