களை கட்டும் நாங்குநேரி, விக்கிரவாண்டி.. திமுக, அதிமுக, காங். வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு
Recommended Video
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில், திமுக கூட்டணி, மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 23-ஆம் தேதி துவங்கியது ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வரை தேய்பிறை இருந்தது. சனிக்கிழமைவரை அமாவாசை தினம். எனவே, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் வளர்பிறை துவங்கியுள்ளது.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்றைய தினம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோல நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் மதியம் 2.15 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆகமொத்தம் இரு முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் இடைத் தேர்தலில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1ம் தேதியான நாளை நடைபெறும். அக்டோபர் 3ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications